Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில்,  ​​400 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் எல்ஐசியின் IPO உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2022, 12:48 PM IST
  • நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு 20000 கோடி செலவிடப்படும்.
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள்.
  • 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்தும் திட்டம்.
Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்! title=

 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நான்காவது மற்றும் மோடி அரசின் 10வது பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்கிறார். அதில் ​​400 வந்தே பாரத் ரயில்கள் மற்றும் எல்ஐசியின் IPO உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். ​​நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என நிதி அமைச்சர் மதிப்பிட்டார்.

இதுவரை வெளியாகியுள்ள அறிவிப்புகள்
- அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளம் 2022 பட்ஜெட்டில் போடப்பட்டது
தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் 16 லட்சம் வேலைகள் 

- மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் வரும்

- எல்ஐசியின் IPO விரைவில் .

- 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயிகள் இயக்கப்படும்

- 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்தும் திட்டம்

- PM வீட்டுக் கடனுக்காக ₹48000 கோடி ஒதுக்கீடு

- வீட்டிற்கான குடிநீர் திட்டத்திற்கு ₹60000 கோடி ஒதுக்கீடு

- பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்

- 'India at 100' திட்டத்திற்கான பிரதம மந்திரி கதி சக்தி யோஜனா 

- தேசிய நெடுஞ்சாலை இணைப்பு 2022-23 ஆண்டில் 25 ஆயிரம் கி.மீ

- நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு ₹20000 கோடி செலவிடப்படும்

- விவசாயிகளுக்கு MSP க்காக ₹2.7 லட்சம் கோடிவழங்கும்

- விவசாயிகளுக்கான ட்ரோன்களை அரசாங்கம் ஊக்குவிக்கும்

- கென்-பெட்வா நதி இணைப்புக்கு ~ 1400 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

- விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க PPP முறையில் திட்டம் தொடங்கப்படும்.

- குறைந்தபட்ச ஆதரவு விலையில் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்ய அரசு ரூ.2.37 லட்சம் கோடி செலுத்தும்

- PM இ-வித்யாவின் 'ஒரு வகுப்பு, ஒரு டிவி சேனல்' நிகழ்ச்சி 12 என்ற அளவில் இருந்து 200 டிவி சேனல்களாக உயர்த்தப்படும். இதன் மூலம் அனைத்து மாநிலங்களும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளில் துணைக் கல்வியை வழங்க முடியும்.

- வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 1500 கோடி ஒதுக்கீடு

- அனைத்து தபால் நிலையங்களும் கோர் பேங்கிங் அமைப்புடன் இணைக்கப்படும், 1.5 லட்சம் தபால் நிலையங்கள் ஆன்லைனில் இணைக்கப்படும்.

- NPA சாவல்களை சமாளிக்க திட்டம்

- அடுத்த 3 ஆண்டுகளில், பிரதமர் கதி சக்தி சரக்கு  போக்குவரத்துக்கான 100 டெர்மினல்கள் கட்டப்படும்

முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பொது பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியைத் தவிர, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ALSO READ |  Budget 2022: ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரட்டிக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News