UGC NET 2018 தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Last Updated : Sep 30, 2018, 11:08 AM IST
UGC NET 2018 தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! title=

முதல்முறையாக ஆன்லைனில் நடத்தப்படும் ’நெட்’ தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்தவகையில் கடந்த ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வந்தது. 

இந்நிலையில் தற்போது இந்த தேர்வானது முதல் தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் நடத்த உள்ளது. 

அதன்படி, தேசிய தேர்வு முகமையின் முதல் நெட் தேர்வு டிசம்பர் மாதம் 9-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

 

Trending News