புதிய கிரிமினல் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.7 லட்சம் அபராதம்! வட மாநிலங்களில் வெடித்தது போராட்டம்!

Truck Drivers Protest: விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடினால் 10 ஆண்டு சிறை, ரூ.7 லட்சம் அபராதம். புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி-பஸ் ஓட்டுனர்கள் போராட்டம்

Last Updated : Jan 2, 2024, 01:58 PM IST
புதிய கிரிமினல் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.7 லட்சம் அபராதம்! வட மாநிலங்களில் வெடித்தது போராட்டம்! title=

Bharatiya Nyay Sanhita: மத்திய அரசின் புதிய ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக லாரி, டிப்பர் மற்றும் பஸ் டிரைவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பெட்ரோல், டீசல் எடுத்து செல்லும் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் பல மணிநேரம் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளுக்காகக் காத்திருக்கிறார்கள். பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் பங்கேற்று இருப்பதால், பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு பேருந்து வாகனம் எதுவும் கிடைக்காமல், சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேபோல பெட்ரோல், டீசல் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பல பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும், அதைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன என்றும் கூறப்படுகிறது.

லாரி, பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்வது ஏன்?

மத்திய அரசு ஹிட்-அண்ட்-ரன் தொடர்பான புதிய சட்டங்களை உருவாக்கியுள்ளது. இந்த புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் லாரி அல்லது டிப்பர் டிரைவர் ஒருவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடினால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது தவிர ரூ.7 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னதாக  இருந்த சட்டத்தின் படி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடினால், அவருக்கு அதிகபட்சமாக மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை என்று இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுனர் சில நாட்களில் ஜாமீன் பெற்று வெளியே வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, குற்றவாளி இப்போது பத்து ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். எனினும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்திற்கு லாரி மற்றும் டிப்பர் டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க - அயோத்தி ராமர் கோயில்... திறக்கவே இல்லை அதற்குள் பெரிய மோசடி புகார் - பின்னணி என்ன?

மகாராஷ்டிராவில் போராட்டம் வன்முறையாக மாறியது

மகாராஷ்டிராவில் சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியும், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். நவி மும்பையில் உள்ள நெருல் என்ற இடத்தில் இன்று காலை டிரக் டிரைவர்கள் ஒரு போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, மும்பை - பெங்களூரு நெடுஞ்சாலையில் திரண்டிருந்த கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

அதேபோல மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்தைத் தடுக்க டிரக் ஓட்டுநர்கள் முயன்றனர் மற்றும் போலீஸார் மீது கற்களை வீசினர். அதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். கல் வீச்சில் போலீஸ் வாகனம் சேதமடைந்தது. அதே நேரத்தில், சோலாப்பூர், கோலாப்பூர், நாக்பூர் மற்றும் கோண்டியா மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மத்திய பிரதேசம்: கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெறுங்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்ற கோஷங்களுடன் லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் பெட்ரோல் பம்புகளும் பாதிக்கப்பட்டன. இங்குள்ள பெட்ரோல் பங்கில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. லாரி டிரைவர்களின் இந்த வேலைநிறுத்தம் மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இதனால் பெட்ரோல் பம்பிற்கு எரிபொருள் செல்ல முடியாது. அதே நேரத்தில், பல மாவட்டத்தில் பஸ் மற்றும் டிரக் டிரைவர்களின் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

ராஜஸ்தான்: லாரி டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர்

ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஹனுமன்கர் மாவட்டத்தில் டிரக் மற்றும் பஸ் டிரைவர்களும் வீதிகளில் இறங்கினர். இந்த சட்டத்தை கண்டித்து அவர்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போராட்டக்கார்கள் அரசு மற்றும் நிர்வாகத்துக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக கோஷங்களை எழுப்பினர். 

டெல்லி: போராட்டத்தில் பங்கேற்காத போக்குவரத்து சங்கங்கள்

டெல்லியை பொறுத்தவரை மற்ற வட மாநிலங்கள் போல பெரிய அளவில் போராட்டம் நடைபெறவில்லை என்றாலும், ஆங்காங்கே சில இடங்களில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் பெரிய போக்குவரத்து சங்கங்கள் போரடட்டத்தில் ஈடுபடவில்லை. 

மேலும் படிக்க - இந்தமுறை “கை” கொடுக்குமா? தேர்தலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. பாரத் நியாய் யாத்ரா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News