Tokyo Olympics 2020: டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார்.
இந்தியா தடகள பிரிவில் பெறும் முதல் தங்கம் இதுவாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் நீண்டகால தங்கப்பதக்க கனவு நனவாகியுள்ளது.
நீரஜ் சோப்ரா தகுதி சுற்று போட்டியில் 86.65 மீட்டர் ஈட்டி எறிந்து இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார். அதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்தார். இதில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்றனர்.
Javelin thrower Neeraj Chopra wins the first #Gold medal for India at #Tokyo2020; throw 87.58 meters in first attempt pic.twitter.com/gsbwb5xIBy
— ANI (@ANI) August 7, 2021
நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் இந்தியா, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் (Olympic Games) 47 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது வரை ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலப் பதங்களுடன் இந்தியா 47 ஆவது இடத்தில் உள்ளது.
நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 6 கோடி பரிசுத் தொகை அளிக்கப்படும் என ஹரியாணா அரசு அறிவித்துள்ளது.
ALSO READ: ஒலிம்பிக்கில் ஆறாவது பதக்கம்!! வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) அவர்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், ‘இன்று டோக்கியோவில் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவின் சாதனை என்றென்றும் நினைவில் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
History has been scripted at Tokyo! What @Neeraj_chopra1 has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold. #Tokyo2020 https://t.co/2NcGgJvfMS
— Narendra Modi (@narendramodi) August 7, 2021
ALSO READ: மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவி தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR