CM Mamata Banerjee About INDIA Alliance in West Bengal: மக்களவை பொதுத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியாக, பல எதிர்க்கட்சிகள் தற்போது மாநில அளவிலும், தேசிய அளவிலும் கைக்கோர்த்துள்ளன எனலாம். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் என மொத்தம் 28 கட்சிகள் இணைந்து INDIA கூட்டணியை அமைத்தன.
பெரிய குழப்பம்
வரவிருக்கும் மக்களவை பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை மட்டும் அடிப்படையாக கொண்டு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், தற்போது கூட்டணியில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது எனலாம்.
கூட்டணியின் முக்கிய தலைவர் மம்தா பானர்ஜி INDIA கூட்டணியில் இருந்துக்கொண்டே மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது, மாநில அளவில் அங்குள்ள 42 மக்களவை தொகுதியில் காங்கிரஸ் உடன் கூட்டணி இன்றி மம்தா பானர்ஜி தேர்தலை சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடனும், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை தொடர்பாக எழுந்த பிரச்னை காரணமாகவும் மம்தா பானர்ஜி இந்த முடிவை எடுத்துள்ளார்.
West Bengal CM Mamata Banerjee says "I had no discussions with the Congress party. I have always said that in Bengal, we will fight alone. I am not concerned about what will be done in the country but we are a secular party and in Bengal, we will alone defeat BJP. I am a part of… pic.twitter.com/VK2HH3arJI
— ANI (@ANI) January 24, 2024
மேலும் படிக்க | மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி
'எங்களால்தான் பாஜகவை வீழ்த்த முடியும்'
"காங்கிரஸ் கட்சியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம். மக்களவை தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய அளவில் கூட்டணி முடிவு செய்வோம்" என மம்தா பானர்ஜி அறிவித்தார். குறிப்பாக, ராகுல் காந்தி மீது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தினார்.
"அவர்கள் (காங்கிரஸ் யாத்திரை) எங்கள் மாநிலத்திற்கு வருகின்றனர். ஆனால், எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற மரியாதை கூட இல்லை" என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். மேலும், அவர் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி உடன் அதிக நெருக்கம் காட்டினாலும், ராகுல் காந்தியுடன் அவருக்கு பெரிய ஆர்வம் இல்லை. மேலும், இதுபோன்ற விஷயங்களை முன்பு ஒருமுறையும் பேசியிருக்கிறார்.
முன்னர் ஒருமுறை,"INDIA கூட்டணி இந்தியாவில் இருக்கும். ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே போராடும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மட்டுமே பாஜகவுக்கு பாடம் புகட்ட முடியும். அது முழு நாட்டிற்கும் வெற்றிப் பாதையை காட்டும், வேறு எந்த கட்சியும் அல்ல" என பேசியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
கவலை இல்லை
மம்தா பானர்ஜி இன்று பேசுகையில்,"எல்லா இடங்களிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். நான் இரண்டு தொகுதியை கொடுக்க திட்டமிட்டோம், ஆனால் காங்கிரஸ் பன்னிரெண்டு தொகுதிகளை கேட்கிறது. நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த விவாதமும் செய்யவில்லை. வங்காளத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்.
தேசிய அளவில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நாங்கள் ஒரு மதச்சார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் நாங்கள்தான் பாஜகவை தனித்து தோற்கடிப்போம். நான் இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கிறேன். நான் பல முன்மொழிவுகளை மேற்கொண்டேன். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே நிராகரித்துவிட்டார்கள். அதில் இருந்து வங்காளத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | INDIA கூட்டணியால் சிதறும் காங்கிரஸ்... தொகுதி பங்கீட்டால் பலத்த அடி... தீர்வு என்ன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ