திருப்பதி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகைகள் மற்றும் காட்டேஜ் போன்ற வீடுகளின் வாடகையை 10 மடங்கு உயர்த்தியது.  

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2023, 07:31 AM IST
  • ஜனவரி 12 முதல் பிப்ரவரி 28 வரை சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
  • ரூ.750 ஆக இருந்த அறை வாடகை தற்போது ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • காட்டேஜ் வீடுகளின் வாடகை ரூ.750ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பதி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை! title=

திருப்பதி வெங்கடாஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கான முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட்-புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த டிடிடி இணையதளத்தின்படி, ஜனவரி 12 முதல் பிப்ரவரி 28 வரை பக்தர்கள் ரூ.300 விலையில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் மற்றும் இந்த தளத்தில் டிக்கெட் முன்பதிவு செயல்முறை கடந்த ஜனவரி 9-ம் தேதி முதலே தொடங்விட்டது.  சமீபத்தில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகைகள் மற்றும் காட்டேஜ் போன்ற வீடுகளின் வாடகையை 10 மடங்கு உயர்த்தியது.

மேலும் படிக்க | Budget 2023: பல துறைகளில் பெரிய அறிவிப்புகள், வரி செலுத்துவோருக்கு நிவாரணம்!! 

நாராயணகிரி விருந்தினர் மாளிகையில் ரூ.750 ஆக இருந்த அறை வாடகை தற்போது ரூ.1,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  மேலும், சிறப்பு வகை காட்டேஜ் வீடுகளின் வாடகை ரூ.750ல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  தேவஸ்தானத்தின் இந்த அதிரடியான கட்டண உயர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  எனவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), வீட்டு வாடகையை திருத்தியமைத்து, சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்று மக்கள் அறக்கட்டளைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும் திருப்பதி தேவஸ்தானம் தங்களது முடிவை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை மற்றும் கட்டண உயர்வுக்கு தகுந்த நியாயங்களையும் விளக்கியுள்ளது.  அதாவது எஸ்வி ரெஸ்ட் ஹவுஸ் மற்றும் நாராயணகிரி ரெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றில் பல நவீன மேம்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.  இப்போது திருப்பதி சிறப்பு தரிசனத்திற்கு எவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யவேண்டும் என்பதை பற்றி இங்கே காண்போம். 

1) திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tirupatibalaji.ap.gov.in. என்பதற்கு செல்ல வேண்டும்.

2) இப்போது "ஆன்லைன் முன்பதிவு" ஆப்ஷனை தேர்வுசெய்து, டிடிடி தர்ஷன் புக்கிங் ஆன்லைன் என்பதை  தேர்ந்தெடுக்கவும்.

3) மின்னஞ்சல் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஒரு கணக்கை உருவாக்கி, பின்னர் "சமர்ப்பி" என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யவேண்டும்.

4) பின்னர் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சேர்த்து ம் டிடிடி டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் முன்பதிவு படிவத்தை நிரப்பவும்.

5) கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் அல்லது நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் சேவைகள் மூலம் நீங்கள் பணம் செலுத்தலாம்.

6) பணம் செலுத்தியவுடன், ரூ.300 டிடிடி டிக்கெட்டை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது டிடிடி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Budget 2023: இந்தியாவின் வருமானத்திற்கான வழிகள் என்ன? ‘நாட்டு பட்ஜெட்’ வருவாய் வழிகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News