திருமண விழாவில் நீண்ட நேரமாக உணவு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த புகைப்படக்காரர் திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமகன் கண்முன்னே அழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய திருமணங்களில் வெட்டிங் போட்டோ ஷூட் என்பது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. திருமணங்களில் எது இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் போட்டோ ஷூட் இருக்கும். இந்நிலையில் தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த மணமகன் தனது நண்பனையே திருமணத்திற்கான போட்டோகிராபராக அமர்த்தியுள்ளார்.
அந்த நபரும் மணமகன் தனது நண்பன் என்பதால் குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் திருமணத்தன்று காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த அந்த போட்டோகிராபர் மணமகன் கண்முன்னேயே திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து படங்களையும் டெலிட் செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த நபர் கூறியுள்ளதாவது, திருமண நிகழ்வு தொடர்பாக புகைப்படம் எடுக்க எனக்கு 19 ஆயிரம் ரூபாய் ( $250 ) தருவதாக கூறினார்கள். மணமகன் எனது நண்பன் என்பதாலேயே குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டேன்.
காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை புகைப்படங்களை எடுத்தேன். மாலை 5 மணிக்கு உணவு பரிமாறினார்கள். ஆனால் புகைப்படம் எடுப்பதற்காக என்னை சாப்பிடவிடவில்லை. மேலும், தொடர்ந்து படமெடுத்து கொண்டிருந்ததால் நான் மிகவும் சோர்வடைந்தேன். இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. இதனாலேயே மணமகன் முன்னாலேயே எடுத்து அனைத்து புகைப்படங்களையும் அழித்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
ALSO READ வீட்டின் முன் ஏற்பட்ட திடீர் பள்ளம்! அதிர்ச்சியில் மக்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR