ஜம்மு-காஷ்மீருக்குப் பிறகு, குங்குமப்பூ சாகுபடி வடகிழக்கு இந்தியா பகுதியிலும் விரிவாக்கப்பட உள்ளது.
நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் குங்குமப்பூவை சாகுபடி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான ஒரு பைலட் திட்டத்தை வடகிழக்கு தொழில்நுட்ப பயன்பாட்டு மையம் (NECTAR) மேற்கொண்டுள்ளது.
இதுவரை காஷ்மீரில் மட்டுமே சாகுபடி செய்யப்படும் குங்குமப்பூ விரைவில் இந்தியாவின் வடகிழக்கு வரை விரிவடையக்கூடும். காஷ்மீரில் இருந்து சிக்கிமுக்கு கொண்டு செல்லப்பட்ட விதைகளிலிருந்து இப்போது வடகிழக்கு மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள யாங்கியாங்கில் பயிரிடப்பட்டு பூக்கின்றன, என NECTAR வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குங்குமப்பூ உற்பத்தி நீண்ட காலமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டுமே பயிரிடப்பட்டு வருகிறது. பொதுவாக காஷ்மீரின் குங்குமப்பூ வின் கிண்ணம் என்று அழைக்கப்படும் பாம்பூர் பகுதி, குங்குமப்பூ உற்பத்திக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். அதைத் தொடர்ந்து புட்கம், ஸ்ரீநகர் மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களும் வருகின்றன.
குங்குமப்பூ பாரம்பரியமாக பிரபலமான காஷ்மீர் உணவுகளுடன் தொடர்புடைய உணவு பொருளாகும். இதன் மருத்துவ குணங்கள், காஷ்மீரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. குங்குமப்பூ வளர்ப்பது காஷ்மீரில் மிகவும் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டுமே செய்யப்படுவதால், அதன் உற்பத்தியும் குறைவான அளவில் தான் உள்ளது. குங்குமப்பூ மீதான தேசிய அளவிலான திட்டத்தின் மூலம் அதன் விவசாயத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இந்த நடவடிக்கைகள் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
The Saffron Bowl of India extends to the North East.
NECTAR undertakes a pilot project.
Plants from seeds transported from Kashmir to Sikkim and acclimatized there are now flowering in Yangyang in South district of Sikkim.https://t.co/YYyINkvyMo @PMOIndia @MIB_India pic.twitter.com/IPZQuHg98M— PIB in Sikkim (@PIBGangtok) November 9, 2020
ALSO READ | அபுதாபியின் முதல் இந்து கோவிலை அலங்கரிக்க உள்ள இந்து காவிய சிற்பங்கள்..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR