ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்; மத்திய அரசு கூறுவது என்ன..!!

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2022, 03:37 PM IST
  • உலக சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வரும் இந்தியா.
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்.
  • ரஷ்யா இந்தியாவிற்கு உதவ உறுதியளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்; மத்திய அரசு கூறுவது என்ன..!! title=

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் செயல்பாடுகளை மத்திய அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

இதனிடையே, கச்சா எண்ணெய் கொள்முதல் மற்றும் விலைகள் தொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் அரசு பகிர்ந்துள்ளது. ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விக்கு, சரியான நேரத்தில் நாட்டின் நலன் கருதி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்பாக, அவர்களின் பேச்சுவார்த்தைகள் சாதகமான திசையில் சென்று கொண்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது, ​​3.8 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வாங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. அதே நேரத்தில், தற்போதைய சூழ்நிலையில், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கான காப்பீடு குறித்து உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ரஷ்யாவும் இந்தியாவிற்கு உதவ உறுதியளித்துள்ளது என இந்தியா கூறியுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்யா - உக்ரைன் போர்: கிவ் நகரில் மார்ச் 17ம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்

கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் எவ்வளவு கிடைக்கும், பணம் செலுத்தும் முறை,  சரக்குகளை எவ்வாறு கொண்டு வருவது போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் மேலும் கூறினார். இந்தியா தனது கச்சா எண்ணெயில் பெரும்பாலானவற்றை வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவிடமிருந்து  மூன்று சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே வாங்குகிறது. 

கச்சா எண்ணெய் மீது எந்த நாடும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்காததால், உலகத் தடைகள் காரணமாக இந்தியாவுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்று அரசு கூறுகிறது. எனவே, தற்போதைக்கு நாட்டில் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், ரஷ்யாவின் எரிசக்தி துறையில் இந்தியாவின் முதலீடு குறித்து ஹர்தீப் சிங் பூரியுடன் கடந்த வாரம் விவாதித்ததாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால், நோவக் மற்றும் பூரி இடையேயான பேச்சுவார்த்தை குறித்த இந்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 30 லட்சம் பீப்பாய்கள்  கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து  20-25% தள்ளுபடி விலையில் வாங்குவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் மிக முக்கியமாக, கச்சா எண்ணெய் டெலிவரியின் போது அமெரிக்க டாலரில் இல்லாமல் இந்திய ரூபாயில் கட்டணம் செலுத்தப்பட இருப்பதகா தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News