படிக்கும் வயதில் பல குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு செல்லும் சூழல் இந்திய நாட்டில் கொரோனா காலத்திற்கு பிறகு அதிகரித்து வருகிறது,. இந்நிலையில் ஹைதராபாத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை குறைக்கும் வகையில் தனது படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளான்.
பெற்றோருக்காக மட்டுமல்லாமல் தனது 12 வயது சகோதரியின் உயிரை காக்கவும் அந்த சிறுவன் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காண்போர் மட்டும் அல்லது பார்போர் அனைவரது மனதையும் நெகிழ செய்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் அஜீஸ் என்கிற 10 வயது சிறுவனுக்கு சகீனா பேகம் என்கிற 12 வயது சகோதரியும் உண்டு.
இந்த சிறுமிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் மூளை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த புற்றுநோயை குணப்படுத்த சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து சிகிச்சைக்காக பணம் செலவிட்டு வருகின்றனர்.
சகீனா பேகமின் சிகிச்சைக்காக அவரது பெற்றோர் முடிதவரை பணம் செலவழித்து போதிலும், மறுத்துத்துவ செலவுகளை சமாளிக்க சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து திண்டாடி வருகின்றனர். சகோதரியின் மருத்துவ சிகிச்சையை சமாளிக்க முடியாமல் தனது குடும்பம் கஷ்டப்படுவதை கண்ட சிறுவன் சையத் அஜீஸ், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முடிவெடுத்து தனது தாயுடன் இணைந்து பறவைகளுக்கான உணவை விற்க முடிவு செய்துள்ளான்.
ALSO READ | வறுமையிலிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான பயணத்தில் ராணி ராம்பால்
தனது குடும்பம் மற்றும் தனது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக 10 வயது மகன் நிதி திரட்ட உதவுவது குறித்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ள அஜீஸின் தாய் பில்கேஸ் பேகம், " மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள எனது மகள் சகீனா பேகமின் உயிரை காப்பாற்ற ரேடியோ தெரபி சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் எங்களுக்கு பரிந்துரைத்தனர். பின்னர் தெலுங்கானா அரசிடமிருந்து நாங்கள் நிதியை பெற்றோம். அரசு கொடுத்த முழுத் தொகையும் சகீனாவின் ரேடியோ தெரபி சிகிச்சைக்காக செலவழித்ததில் தீர்ந்துவிட்டது.
Telangana | A 10-yr-old boy sells bird food in Hyderabad to pay for his sister Sakeena Begum's brain cancer treatment.
"We haven't received any help. We received govt funds only till radiation therapy. The medication is too expensive," says Bilkes Begum, Sakeena's mother pic.twitter.com/S5G5l9cKWq
— ANI (@ANI) August 6, 2021
மருத்துவத் தேவைகளுக்கும் பணம் செலவழித்த பின், இப்போது மீண்டும் மகளுடைய சிகிச்சைக்கான நிதி நிலையில் பழைய நிலைக்கே வந்து விட்டோம். எங்களின் கஷ்டத்தை பார்த்த அஜீஸ் அவனால் முடிந்த உதவிகளை செய்வதாக கேட்டான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எம்ஆர்ஐ, எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பிற மருத்துவ செலவுகளும் வரிசையாக தொடர்வதால், பறவை உணவை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மருந்து செலவுகளை சமாளித்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இதன் மூலம் கிடைக்கும் பணம் போதுமானதாக இருப்பதாகவும் அஜீஸின் தாயார் கூறி இருக்கிறார்.
போது மக்கள் அனைவரும் முன் வந்து தனது மகளைக் காப்பாற்ற உதவுமாறு பேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது சகோதரியின் சிகிச்சைக்கு உதவி செய்ய பறவைகள் உணவை விற்கும் வேலையில் ஈடுபட்டாலும், சிறுவன் அஜீஸ் கல்வி கற்பதையும் விடவில்லை. ஹைதராபாத்தில் உள்ள உள்ளூர் மதராசாவில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தனது கல்வியைத் தொடரும் சிறுவன் அஜீஸ், காலை சீக்கிரமே எழுந்து பள்ளிக்கு போவதற்கு முன் வரை தாயுடன் சேர்ந்து பறவை உணவை விற்று வருகிறான்.
ALSO READ | விந்தை உலகம்: சீனாவில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR