ஹைதராபாத் என்கவுன்ட்டர்: SIT அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு!

ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Dec 9, 2019, 11:06 AM IST
ஹைதராபாத் என்கவுன்ட்டர்: SIT அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு! title=

ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது!

ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரையும், கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், போலீசாரை தாக்கிவிட்டுதப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். 

இது தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா அரசும் ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம் பாகவத் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. என்கவுன்ட்டருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

 

Trending News