சர்ஜிகல் ஸ்டிரைக் 2ம் ஆண்டு தினம்: கோனார்க் போர் நினைவகத்தில் பிரதமர் மரியாதை!

இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதன் 2-வது ஆண்டு தினத்தை ஒட்டி ராஜஸ்தான் மாநிலம் கோனார்க்கில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

Last Updated : Sep 28, 2018, 10:43 AM IST
சர்ஜிகல் ஸ்டிரைக் 2ம் ஆண்டு தினம்: கோனார்க் போர் நினைவகத்தில் பிரதமர் மரியாதை! title=

இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதன் 2-வது ஆண்டு தினத்தை ஒட்டி ராஜஸ்தான் மாநிலம் கோனார்க்கில் உள்ள போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி இன்று மரியாதை செலுத்தினார்.

இந்திய ராணுவம் வெளியிட்ட 2016 "சர்ஜிகல் ஸ்டிரைக்" வீடியோ

கடந்த செப்டம்பர் 29 ஆம் நாள் ஜம்மு - காஷ்மீர் எல்லையை தாண்டி சென்று நள்ளிரவில், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை "சர்ஜிகல் ஸ்டிரைக்" மூலம் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அழித்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த வகையில் நாளை "சர்ஜிகல் ஸ்டிரைக் தினம்" கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அன்றைய நாளில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் என்.சி.சி அணிவகுப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு, கண்காட்சி  போன்ற நிகழ்ச்சிகளை நடத்த ஏற்ப்பாடு செய்ய வேண்டும் என யூஜிசி பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், நாளை இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதின் இரண்டாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி, அங்குள்ள கோனார்க் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், அங்குள்ள ராணுவ பள்ளியில் ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். 

 

 

 

 

 

Trending News