பெகாசஸ் உளவு விவகாரம்...விசாரணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : May 20, 2022, 02:52 PM IST
  • பெகாசஸ் உளவு விவகாரம்
  • விசாரணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • உச்சநீதிமன்றம் உத்தரவு
பெகாசஸ் உளவு விவகாரம்...விசாரணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் title=

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300க்கும் அதிகமானோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச தலைவர்களின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய பதில் தரக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் நாடாளுமன்றம் முடங்கியது. பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா என்பதை பொதுவெளியில் விவாதிக்க முடியாது - மத்திய அரசு

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 29 மொபைல் போன்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சில மனுதாரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைக்குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் தேவையான கூடுதல் தகவல்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என விசாரணைக் குழு அனுமதி கோரியது. இதனைத் தொடர்ந்து, விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் நான்கு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. விசாரணைக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் வரும் ஜூன் 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | பெகாசஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை குழு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News