82nd Mann Ki Baat: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் 100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டியதற்கு பெருமிதம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இலக்கை எட்டுவதற்கு உதவிய அனைத்து இந்திய மக்களுக்கும், பணியாளர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் மோடி இன்று 82வது முறையாக மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கான நன்றிகள் என்று நன்றி நவில்தலுடன் தனது உரையை பிரதமர் மோடி துவக்கினார்.
100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை எட்டிய இந்தியா, புத்துணர்ச்சியுடன், புதிய உற்சாகத்துடனும், உத்வேகமாக முன்னேறுவதால் பாராட்டுதலுடன் நிகழ்ச்சியைத் தொடங்குவதாக பிரதமர் கூறினார்.
Read Also | நவம்பர் 1 முதல் தமிழக திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!
”எனது அன்பான நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!100 கோடி தடுப்பூசி டோஸுக்குப் பிறகு, இன்று நாடு புதிய உற்சாகத்துடன், புதிய ஆற்றலுடன் முன்னேறிக்கொண்டிருப்பதால், இந்த வணக்கத்தைச் சொல்கிறேன்.நமது தடுப்பூசி திட்டத்தின் வெற்றி நாட்டின் திறனை காட்டுகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.
100 கோடி தடுப்பூசி என்ற எண்ணிக்கை நிச்சயமாக மிகப்பெரியது, ஆனால் மில்லியன் கணக்கான சிறிய, ஊக்கமளிக்கும் மற்றும் பெருமைமிக்க அனுபவங்கள் மற்றும் பல எடுத்துக்காட்டுகள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின், நாட்டு மக்களின் திறன்களை நான் நன்கு அறிந்திருப்பதால் இந்த மாபெரும் சாதனையை நாடு நிகழ்த்தியிருக்கிறது என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சுகாதாரப் பணியாளர்களின் அயராத உழைப்பாலும் உறுதியாலும் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியிருப்பதாக கூறிய பிரதமர், புதுமையுடன் கூடிய உறுதியுடன் மனித குலத்திற்கான சேவையின் புதிய அளவுகோலை நாடு உருவாக்கியிருப்பதாக சிலாகித்தார்.
உத்தரகண்டின் பாகேஸ்வரில் 100 சதவீத முதல் டோஸைப் பயன்படுத்துவதற்கான வேலை முடிந்தது. இது மிகவும் கடினமான மற்றும் தொலைதூரத்தில் உள்ள அணுகுவதற்கு சிரமமான பகுதி என்பதால் உத்தரகாண்ட் அரசாங்கத்திற்கும் பாராட்டுகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.
Also Read | NET தகுதி தேர்வு தேதிகளை அறிவித்தது UGC!
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கும் தனது அஞ்சலியை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். அக்டோபர் 31ம் தேதியன்று பிறந்தவர் நாட்டின் இரும்பு மனிதர் என்று அறியப்படும் சர்தார் வல்லபாய் படேல். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடும் என்றுகூறிய பிரதமர் நரேந்திர மோதி, 'மன் கி பாத்' கேட்கும் ஒவ்வொருவரின் சார்பாகவும், தனது சார்பாகவும்... இரும்பு மனிதனுக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார். நம்மிடம் ஒற்றுமை இல்லையென்றால், புதிய பேரிடர்களில் சிக்கிக்கொள்வோம். அதாவது தேசிய ஒருமைப்பாடு இருந்தால், நாடு முன்னேறும், வளர்ச்சியடையும் என்று கூறிய பிரதமர், இதற்கு நமது சுதந்திர இயக்கம் மிகப்பெரிய உதாரணம் என்று தெரிவித்தார்.
ஒற்றுமையின் செய்தியைக் கூறும் சில செயல்களில் நாம் இணைந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும் என்று கூறிய பிரதமர், அதற்கு உதாரணத்தையும் மேற்கோளிட்டுக் காட்டினார்.
அண்மையில் குஜராத் காவல்துறையினர் கட்ச் நகரில் உள்ள லக்பட் கோட்டையில் இருந்து ஒற்றுமை சிலைக்கு பைக் பேரணி நடத்தியதை மிகவும் அற்புதமானது என்று பாராட்டிய பிரதமர், திரிபுராவில் இருந்து ஒற்றுமை சிலை வரை பைக் பேரணியையும் சுட்டிக் காட்டினார். ஒற்றுமை தினத்தை கொண்டாடும் வகையில் திரிபுரா காவல் துறையினர் கிழக்கிலிருந்து மேற்காக நாட்டை இணைக்கும் வகையில் பைக் பேரணியை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளும் இதேபோன்ற பைக் பேரணியை உரியில் இருந்து பதான்கோட் வரை நடத்தி நாட்டின் ஒற்றுமைக்கான செய்தியை வழங்குகிறார்கள். இந்த வீரர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் தெரிவித்தார்.
Also Read | அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்படும் விஜய் மற்றும் ரஜினியின் படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR