பயங்கரம்! வேலைக்கா போற.. மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

Today Crime News: வேலைக்குச் சென்ற மனைவியை நடுரோட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 7, 2022, 10:02 AM IST
பயங்கரம்! வேலைக்கா போற.. மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் title=

Husband Attacks Wife: மதுப்பழக்கம் ஒரு குடும்பத்தை எவ்வளவு சீரழிக்கும் என்பதை பலர் நேரில் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விபட்டு இருப்பீர்கள். சில சமயம் கொலையிலும் முடிவதுண்டு. குடும்பங்கள் மகிழ்வாக வேண்டுமெனில் மது ஒழிப்பு அவசியம். அதிகமாகக் குடிப்பதால் கோபம், வெறுப்பு, காரணமே இல்லாமல் நண்பன், உறவினர், குடும்பம் உறுப்பினரிடம் சண்டை, மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பது என நாளுக்கு நாள் நிலைமை விபரீதமாகும். இதற்கு உதாரணமாக தற்போது கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மனைவி மீது சந்தேக பார்வை கொண்ட குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவனை பிரிந்து பல ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மனைவியை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் பைத்தானில் உள்ள நேருநகர் பகத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட திருமணமான பெண்ணின் பெயர் மந்தா தியானேஷ்வர் போல் (வயது 30). கொலை செய்த இரக்கமற்ற கணவனின் பெயர் தியானேஷ்வர் குண்ட்லிக் போல்.

மேலும் படிக்க: தலைதூக்குகிறதா பட்டாக்கத்தி கலாசாரம்... அரசு பேருந்து கண்ணாடியை உடைத்து அராஜகம்

இந்த வழக்கு சம்பந்தமாக போலீசார் மேலும் பல தகவல்களை தெரிவித்தனர். தியானேஷ்வர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவரின் குடிப்பழக்கம், குடிபோதையில் அடித்தல், ஆபாசமாக பேசுதல் போன்ற காரணங்களால் இருவரும் சுமார் இரண்டு மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

தனது வயித்து பிழைப்புக்காக மந்தா பைதானில் உள்ள தனியார் மருத்துவமனையில் மந்தா தியானேஷ்வர் போல் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில், தன் மனைவி மீண்டும் தன்னுடன் இணைந்து வாழ வேண்டும் என்று தியானேஷ்வர் அடிக்கடி மனைவியிடம் வலியுறுத்தி உள்ளார். ஆனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மந்தா மறுத்துவிட்டார். இதனால் தன் மனைவி மீது கோபமாக தியானேஷ்வர் இருந்துள்ளார்.

மேலும் படிக்க: வரதட்சணைக்காக மனைவியை கொன்ற கொலைகார கணவன் கைது

வழக்கம் போல் இன்று காலை மந்தா தனது வீட்டில் இருந்து புறப்பட்டு மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது நேருநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் இருந்து வந்த கணவன் தியானேஷ்வர், மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை எடுத்து, மந்தாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். தொடர்ந்து பலமுறை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் மந்தா ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார். தலையில் அடிபட்ட கீழே விழுந்த மந்தாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தன்ர். ஆனால் சம்பவ இடத்திலிருந்து தியானேஷ்வர் தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பைத்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மந்தாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், தலையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளதால் மந்தா இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். இந்நிலையில், பைத்தான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் நடந்த பரபரப்பான கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிர வைக்கும் காதல் கொலை! 5வது காதலனைக் கொல்ல உதவிய 4 காதலர்கள்

Trending News