பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர் மரணம் - பயணிகளின் உயிர்காத்த நடத்துநர்

Karnataka Bus Driver Heart Attack: கர்நாடகாவில் பேருந்து ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றினார்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2024, 04:10 PM IST
  • துரதிருஷ்டவசமாக ஓட்டுநர் உயிரிழந்தார்.
  • குமார் என்ற அந்த ஓட்டுநருக்கு மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
  • இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பேருந்து ஓட்டும்போது மாரடைப்பு... ஓட்டுநர் மரணம் - பயணிகளின் உயிர்காத்த நடத்துநர் title=

Karnataka Bus Driver Heart Attack: பரபரப்பான சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆக பரவுவது வாடிக்கையானதுதான். அந்த வகையில், சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது அதிகமானோரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. தறிகெட்டு ஓடிய பேருந்தில் இருந்து பயணிகளை நடத்துநர் காப்பாற்றிய அந்த வீடியோ பார்ப்போரை பதற்றத்திற்கும், வியப்பிற்கும் ஆளாக்கியது எனலாம். 

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் பேருந்து ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஓட்டுநருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இதனால் பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்துள்ளது. உடனே விவேகமாக செயல்பட்ட நடத்துநர், அந்த பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். தற்போது அந்த பேருந்தில் இருந்த சிசிடிவி கேமரா இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது. இந்த சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

பயணிகளை காப்பாற்றிய நடத்துநர்

அந்த 1 நிமிடம் 53 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஓட்டுநர் பேருந்தை இயல்பாக ஓட்டிசெல்கிறார். ஒரு நிமிடம் கழித்து அவர் இருக்கையில் இருந்து சரிந்து விழ, அந்த பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் பக்கவாட்டில் மோதியப்படி சென்றது. பேருந்து மோதிய உடனேயே அந்த பேருந்து நடத்துநர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார். ஒருவேளை அங்கு மற்றொரு பேருந்து இல்லாமல் போயிருந்தால் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கலாம். நல்வாய்ப்பாக அங்கு பேருந்து இருந்ததால், அதில் மோதிய உடனேயே நடத்துநர் உஷாராகிவிட்டார்.

மேலும் படிக்க | கூட்டமான ரயிலில் அந்தரத்தில் தொங்கியபடி ஜம்முன்னு தூங்கும் பயணி..வைரல் வீடியோ..!

இந்த சம்பவம் நேற்று (நவ. 6) நடந்துள்ளது. இது அந்த சிசிடிவி வீடியோவில் உறுதியாகிறது. பேருந்து மற்றொரு பேருந்தில் மோதினாலும் சரி, சாலை தடுப்பில் மோதினாலும் சரி நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் நெட்டிசன்களிடேயே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சூழலில் தைரியமாக செயல்பட்ட நடத்துநருக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்த வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு கணக்குகளில் பார்த்துள்ளனர்.

உயிரிழந்த ஓட்டுநர் குமார்

நீலமங்களா முதல் தசனபுரா வரை செல்லும் இந்த 256 M/1 பேருந்தை குமார் என்ற அந்த ஓட்டுநர் இயக்கினார். பேருந்து நடத்துநர் ஓபலேஷ்தான் அந்த பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினார்.  வண்டியை நிறுத்திய உடன் ஓபலேஷ் குமாரை அருகில் இருந்த வி.பி. மேக்னஸ் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், குமார் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அந்த பேருந்தில் 10 பயணிகள்தான் இருந்திருந்திருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாருக்கு எவ்விதமான பெரிய உடல்நல பாதிப்பு இல்லை என பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. குமார் அன்று நலமுடன் இருந்ததாகவே கூறப்படுகறது. குமார் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு மனைவி மற்றும் 5 வயதில் மகள் இருக்கிறார்கள். 

குமாரின் இறுதிச்சடங்கிற்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் நிதி உதவி அளித்துள்ளது. உயிரிழந்த ஓட்டுநர் குமாருக்கு முழு சேவை பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வூதிய நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | புலியின் வாயில் கையை விட்டு... இன்ஸ்டா பிரபலம் செய்யும் கொடுமைகள் - வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News