மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்சித் காலமானார்!

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

Last Updated : Jul 20, 2019, 04:30 PM IST
மூன்று முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்சித் காலமானார்! title=

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!

டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித்(வயது 81) வயதுமுதிர்வு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் உயிர் பிறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 1998 முதல் 2013 வரை 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக ஷீலா தீக்சித் இருந்துள்ளார். சில ஆண்டுகள் கேரள கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 

1938 மார்ச் 31-ல் பஞ்சாபின் கபுர்தலா என்ற இடத்தில் பிறந்த இவர், டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்து, டெல்லி பல்கலையில் வரலாற்று பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஜனவரி 10-ஆம் தேதி டெல்லி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார் இவர், கடந்த சில மாதங்களக வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில்., ஷீலா தீக்சித் மறைவு செய்தி அறிந்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது., "ஷீலா தீட்சித் ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். அன்பான மற்றும் மரியாதைக்குரிய ஆளுமையால் ஆசீர்வதிக்கப்பட்ட அவர், டெல்லியின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கள்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News