பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Last Updated : Sep 6, 2017, 09:04 AM IST
பெங்களூருவில் பிரபல பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை title=

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.

பெங்களூருவில் உள்ள, ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.

இரு குண்டுகள் அவரது மார்பிலும், ஒரு குண்டு அவரது நெற்றியிலும் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 தனிப்படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடக உள்துறை அமைச்சர் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். 

கேரளா யூனியர் ஆப் ஜர்னலிஸ்ட் இன்று மதியம் 12 மணியளவில் டில்லி, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். 

சென்னை பத்திரிகையாளர்கள் சார்பில் காலை 11 மணிக்கு சென்னை பிரஷ் கிளப் முன்பு போராட்டம் நடைபெறுகிறது. 

இதேபோல், மும்பையில் மாலை 6 மணிக்கும், ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கும், பெங்களூருவில் காலை 8:45 மணிக்கும், மாண்டியாவில் காலை 10 மணிக்கும் அந்தந்த மாநில பத்திரிகையாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

Trending News