ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே தொடங்கிய மனக்கசப்பு விவகாரம் தற்போது மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. இந்த விசயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் எனக்கூறி, மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை சாடியுள்ளார். மேலும் தோல்பூர், அல்வர் மற்றும் பெஹ்ரர் சிறை உடைப்பு சம்பவம் குறித்து சச்சின் பைலட் தனது அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து அவரே கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியதாவது:- மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு குறித்து நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதும் உண்மை தான். சமீபத்திய சம்பவங்கள் குறித்து அரசாங்கம் மிகவும் தீவிரமாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறமால் இருக்க அனைத்தை நடவடிக்கை நாங்கள் எடுத்துள்ளோம். ராஜஸ்தான் மாநில மக்கள் எங்களள் அரசிடம் (காங்கிரஸ்) நிறைய நம்பிக்கையை எதிர்பார்க்கிறார்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு, சட்டம் ஒழுங்கு என்பது ஆட்சியின் மிக முக்கிய பகுதி என்று நான் நினைக்கிறேன். அதில் முழுமையான கவனத்துடன் பணியாற்ற வேண்டும். ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை சரிசெய்ய வேண்டும்.
கடந்த 8 மாதங்களாக எங்கள் கட்சியில் ஏற்ப்பட்ட குழப்பம் காரணமாக, சட்டம் ஒழுங்கு நிலைமை மாறிவிட்டது. அதற்காக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சட்டசபையிலும், தெருவிலும் போராட்டங்களை செய்து வருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது இப்போது தெளிவாகிவிட்டது என்று நான் நினைக்கிறேன் என சச்சின் பைலட் கூறினார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட்டின், இந்த பேச்சு, காங்கிரஸ் கட்சி தலைவர்களை இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.