RuPay கிரெடிட் கார்டுகள் இந்தியாவில் பிரபலமடைந்து வரும் நிலையில், அதை மேலும் விரிவாக்குவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பண அட்டைப் பரிவர்த்தனையில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் (NPCI) மூலம் தயாரிக்கப்பட்டது தான் இந்த ரூபே கார்டு (RuPay).
இந்திய அரசு தொடர்ந்து ரூபே கார்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அதே நேரத்தில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI உள்நாட்டு RuPay அடிப்படையிலான கடன் அட்டையை விரிவுபடுத்த தயாராகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும் கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கான திட்டத்தை NPCI தயாரித்துள்ளது.
மேலும் படிக்க | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?
NPCI இன் தலைமை இயக்க அதிகாரி (COO) பிரவீணா ராய் கூறுகையில், “கிரெடிட் கார்டுகளை பொறுத்தவரையில், நாங்கள் சமீபத்தில் தான் இந்த சந்தையில் நுழைந்துள்ளோம். குறைந்த கால கட்டத்தில் புதிய வாடிக்கையாளர்களின் சந்தைப் பங்கு அதிகரித்துள்ளன. கடந்த 18 மாதங்களில், 12-15 சதவீத புதிய கிரெடிட் கார்டுகள் ரூபேயில் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
இதனுடன், பிரவீணா ராய் மேலும் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் கிரெடிட் கார்டு சந்தை சுமார் 4-42 மில்லியனில் இருந்து சுமார் 65 மில்லியன் கிரெடிட் கார்டுகளாக அதிகரித்துள்ளது. சந்தையில் இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
NPCI இந்தியாவில் RuPay கேட்வே மூலம் ரீடைல் பேமென்ட் மற்றும் செட்டில்மெண்ட் வசதிகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஆகியவற்றின் முன்முயற்சியின் மூலம் வலுவான பேமெண்ட் மற்றும் செட்டில்மென்ட் முறையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராய் கூறுகையில், “ரூபே கார்டுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து தொடர்ந்து திட்டமிட்டு வருகிறோம். டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு இடத்தில் RuPay ஒரு வலுவான இடத்தை பிடித்து வருகிறது. நாங்கள் இப்போது கிரெடிட் கார்டு துறையிலும் எங்கள் கால் தடத்தை பதிக்க திவீர கவனம் செலுத்தி வருகிறோம்.
மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: தவறுகளை மன்னிக்க முடியாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR