2000 ரூபாய் நோட்டில் சாயம் போகிறதா? உண்மை என்ன?

Last Updated : Nov 16, 2016, 11:15 AM IST
2000 ரூபாய் நோட்டில் சாயம் போகிறதா? உண்மை என்ன? title=

புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாயை தண்ணீரில் போட்டு அலசி ஆராயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதிய 2 ஆயிரம் நோட்டை ஒருவர் ஈரமான வெள்ளை துணியை வைத்து தேய்த்தார். அப்போது, அந்த நோட்டில் உள்ள இளம் சிவப்பு கலர் துணியில் படிகிறது. தற்போது 2 ஆயிரம் நோட்டின் கலர் இறங்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் சாயம் போனால், அது நல்ல நோட்டு; சாயம் போகாவிட்டால், அது கள்ள நோட்டு' என மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்தி காந்த தாஸ் டெல்லியில் நேற்று விளக்கமளித்தார்.  "ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட பயன்படுத்தப்படும் மை. சாயம் என்று அவர் கூறியுள்ளார்.

Trending News