சுபாஷ் சந்திராவுக்கு கிடைத்த தொழில் முனைவோருக்கான "Decade" விருது!

ராஜ்ய சபா எம்.பி. சுபாஷ் சந்திரா, உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ளார்.

Last Updated : Feb 22, 2018, 12:12 PM IST
சுபாஷ் சந்திராவுக்கு கிடைத்த தொழில் முனைவோருக்கான "Decade"  விருது!  title=

ராஜ்ய சபா எம்.பி. சுபாஷ் சந்திராவுக்கு உலகளாவிய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சிறந்த தொழில் முனைவோருக்கான ''Decade''  வழங்கப்பட்டது.

பம்பாய் மேலாண்மை சங்கம், கடந்த புதன் அன்று ராஜ்ய சபா எம்.பி. சுபாஷ் சந்திராவுக்கு சிறந்த தொழில் முனைவோருக்கான ''Decade award''  வழங்கி அவரை பாராட்டியது.

ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, புனிட் கோயங்கா, உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்றார், அவரது சார்பாக இந்த விருது வழங்கபட்டது.

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ஜீ குழுமம். 1992ம் ஆண்டு ஜீ நெட்வொர்க்கின் தலைவர் சுபாஷ் சந்திரா, ஜீ தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார்.

அரியானா மாநிலத்தில் பிறந்த இவர். உல்லாசப் பூங்காக்கள், லாட்டரி சீட்டுகள், திரைப்பட அரங்குகள் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டார் 2009 இல் டிஎன்ஏ என்ற செய்தித்தாளையும் தொடங்கினார்.

2016 சூன் திங்களில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றார். தன்வரலாறு நூலை சுபாசு சந்திரா எழுதியுள்ளார். இந்நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

தற்போது இந்தி, மராத்தி, வங்காளம் உள்பட 15 இந்திய மொழிகளில் 32 டி.வி. சேனல்கள் இந்தக் குழுமத்தில் இயங்கி வருகின்றன. 50 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஜீ குழும சேனல்களுக்கு உள்ளனர்.

1998ம் ஆண்டு முதல் அமெரிக்காவிலும் ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கியது.

அதை தொடர்ந்து இந்த விருது வழங்கபட்டது.இந்த விருது ஐந்து முறை மட்டுமே வழங்கப்பட்டது. முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா, குமார் மங்கலம் பிர்லா, அனில் அகர்வால் மற்றும் உதய கோட்டக் ஆகியோர் முதல் ஐந்து வெற்றியாளர்கள்.

அவர்களை தொடர்ந்து தற்போது, ராஜ்ய சபா எம்.பி. சுபாஷ் சந்திராவுக்கு சிறந்த ''தொழில் முனைவோர்'' விருது வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது. 

Trending News