Rahul Gandhi Plea Dismissed: 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்ததை அடுத்து, ராகுல் காந்தி லோக்சபா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். தற்போது அவர் தனது கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகவுள்ளார்.
2024 தேசியத் தேர்தல் உட்பட, வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்களைத் திட்டமிடும் காங்கிரஸுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பு மிகப்பெரிய அடியாகும். ஆனால் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிறைக்கு செல்லமாட்டார் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை முன்பு நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது. ராகுல் காந்தியின் தண்டனையை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தியிருந்தால், அவரது மக்களவை உறுப்பினர் பதவி மீண்டும் கிடைத்திருக்கும்.
குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு கடந்த மே மாதம், அவரின் தண்டனை மீது இடைக்கால தடை உத்தரவை வழங்க மறுத்துவிட்டது. மூன்று வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு அதன் தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்திருந்தது.
Gujarat High Court upholds Sessions Court's order denying stay on conviction of Rahul Gandhi in the defamation case against 'Modi surname' remark. pic.twitter.com/Qzw15PE0Ij
— ANI (@ANI) July 7, 2023
ஏப்ரல் 29ஆம் தேதி நடந்த விசாரணையில், ராகுல் காந்தியின் வழக்கறிஞர், "ஜாமீனில் வெளிவரக்கூடிய, அடையாளம் காண முடியாத குற்றத்திற்காக" இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தனது கட்சிக்காரர் தனது லோக்சபா பதவியை நிரந்தரமாகவும், அதனை திரும்ப பெற முடியாத வகையிலும் இழக்க நேரிடும், இது அவருக்கும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிக்கும் திரும்பி அளிக்க முடியாத கூடுதல் பின்விளைவுகளை ஏற்படுத்தும் கடுமையான செயல்" என தெரிவித்தார்.
மோடி குடும்பப்பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, அவர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றார். 52 வயதான ராகுல் காந்தி, 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதற்காக குஜராத்தில் கடந்த மார்ச் 23 அன்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் எப்படி வந்தது?" என்று ராகுல் காந்தி பேசியற்கு அவர் மீது பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். கேரளாவின் வயநாடு மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனைக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், ஏப்ரல் 20ஆம் தேதி அன்று, தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது, அதன் பிறகு அவர் உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
மேலும் படிக்க | பொது சிவில் சட்ட விவகாரம்... முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு கடிதம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ