மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1484 கோடியை எட்டியது!

பாஜக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.1484 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!

Last Updated : Jul 20, 2018, 02:07 PM IST
மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு ரூ.1484 கோடியை எட்டியது! title=

பாஜக ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டதில் ரூ.1484 கோடி செலவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது!

கடந்த 2014-ஆம் ஆண்டு துவங்கி பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். இந்த பயணங்களுக்காக விமானத்தைப் பராமரித்ததிலும், ஹாட்லைன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததிலும் ஏறக்குறைய ரூ.1484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அவர்கள் தான் பிரதமாராக பதவியேற்ற காலத்தில் இருந்து, மக்களை கவனிக்காமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ள பயணச் செலவானது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியில் பயணச்செலவும் குறித்து நேற்று மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் வெளியிட்டார். அவர் அப்போது தெரிவித்ததாவது...

பிரதமர் அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் விமானத்தைப் பராமரிக்க கடந்த 4 ஆண்டுகளில் ரூ.188.42 கோடி செலவாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த வகையில் ரூ.387.26 கோடி, ஹாட்லைனுக்காக ரூ.9.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காலத்தில் பிரதமர் மோடி 84 நாடுகளுக்கு, 42 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் அதிகபட்சமாக 2015-16-ம் ஆண்டில் 24 நாடுகளுக்கும், 2017-18-ம் ஆண்டில் 19 நாடுகளுக்கும், 2016-17-ம் ஆண்டில் 18 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Trending News