காட்மண்டு BIMSTEC அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அவர்கள் இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரம் குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்!
நேபாள தலைநகர் காட்மண்டுவில் நடைபெற்ற BIMSTEC அமைப்பின் உச்சி மாநாட்டில் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிறிசேனா உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது அவர் இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் மறுவாழ்வு பிரச்சினைகள் குறித்து பேசியாக தெரிகிது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு இந்தியா வீடுகள் கட்டித் தரும் திட்டம் போன்றவற்றில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Delighted to meet President @MaithripalaS. We had extensive deliberations on various aspects of India-Sri Lanka friendship. pic.twitter.com/7rIgrAire9
— Narendra Modi (@narendramodi) August 30, 2018
மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் BIMSTEC அமைப்பில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது எனவும் உறுதியளித்தார்.
தீவிரவாதம் போன்ற பிரச்சினைகளை எதிர்க்க ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என குறிப்பிட்ட அவர், இயற்கைப் பேரிடர் போன்றவற்றை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா விரும்புவகாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.