சுவாமி விவேகானந்தரின் ஆளுயர சிலையை பிரதமர் மோடி வியாழக்கிழமை (நவம்பர் 12) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் திறந்து வைக்கிறார்.
"பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) நவம்பர் 12 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்ட சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை அளவிலான சிலையை வீடியோ கான்பரென்ஸிங் மூலம் திறந்து வைப்பார். இந்த சிலையை திறப்பதற்கு முன்னதாக சுவாமி விவேகானந்தர் குறித்த நிகழ்ச்சி நடைபெறு என, பலகைகழக துணை வேந்தர் ஜெகதேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
"சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் (India) மிக முக்கிய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர். அவர் இந்தியாவில் சுதந்திரம், வளர்ச்சி, நல்லிணக்கம் மற்றும் அமைதி பற்றிய சிந்தனைகளை இளைஞர்களிடையே ஊக்குவித்து உற்சாகப்படுத்தினார். JNU பலகைகழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஆதரவுடன், சுவாமி விவேகானந்தர் சிலை பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சுவாமி விவேகானன்ந்தரின், தத்துவம் இன்றைக்கும் நம் நாட்டின் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.
உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானோருக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வரும் மிக பெரிய ஆளுமையாக திகழும் சுவாமி விவேகானந்தரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது.
சென்ற நவம்பர் மாதம் JNU பல்கலைகழக வளாகத்தில் இருந்த விவேகானந்தர் சிலை சில குண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
At 6:30 this evening, will unveil a statue of Swami Vivekananda at the JNU campus and share my thoughts on the occasion. The programme will be held via video conferencing. I look forward to the programme this evening.
— Narendra Modi (@narendramodi) November 12, 2020
ALSO READ | தில்லி மயூர் விகாரில் DTEA 8வது பள்ளிக் கட்டடம் இன்று தமிழக முதல்வர் திறப்பு!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR