2022-க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி இன்று இந்த அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில், புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சி வீடியோ கான்பரென்ஸிங் மூலம் நடைபெற்றது.
சென்னை, இந்தோர், ராஜ்காட் ராஞ்சி, அகர்தலா மற்றும் லக்னோ ஆறு நகரங்களில் சர்வதேச தொழில்நுட்பத்தில் கட்டப்படும் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) இன்று அடிக்கல் நாட்டி உள்ள திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1,152 ஆகும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ₹ 116 கோடியே 26 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் பங்கு ₹ 63 கோடியே 36 லட்சம் என கூறப்படுகிறது. மாநில அரசு இந்த திட்டத்திற்காக வழங்கும் தொகை ₹35 கோடியே 62 லட்சம் ஆகும். இந்த திட்டத்தின் பயனாளிகளின் பங்கீடு ₹ 17 கோடியே 28 லட்சம் ஆகும்.
அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palanaisamy), துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் பபங்கேற்றார்கள்.
இந்த ஆறு மாநிலத்திலும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு 12 மாதங்களுக்குள் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். புதிய தொழில்நுட்பத்தில் கட்டுப்படும் இந்த வீடுகள், வழக்கமான கட்டுமானத்துடன் ஒப்பிடும் போது, செலவு மிக குறைவாகவும், அதேசமயம் அதிக தரத்துடனும் நீடித்து நிற்கும் வகையிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய யுகத்திற்கான, இந்த வீட்டு வசதி திட்டட்தின் கீழ், ஐஐடி (IIT) மற்றும் இதர பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வடிவமைத்த தொழில்நுட்பத்தில் கட்டப்படுகின்றன. இதில் முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட கட்டமைப்புகள், எஃகு கட்டமைப்புகள், பிவிசி அமைப்புகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
ALSO READ | ஆரோக்கியமே செல்வம் என்பதை 2020 நமக்கு உணர்த்தியுள்ளது: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR