ஆசிரியர் தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று டிவிட் செய்து தெரிவித்துள்ளார்.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 5-ம்) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளதார். அதில்:-
சமுதாயத்தில் சிந்தனை வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சியான கல்விக்காகவும் தங்களை அர்ப்பணிப்பவர்கள் ஆசிரியர்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தினமான இன்று ஆசிரியர்கள் வர்க்கத்திற்கு தலை வணங்குவதாகவும் கூறியுள்ளார்.
தலை சிறந்த ஆசிரியராகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்த டாக்டர்.ராதாகிருஷ்ணனுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
On Teachers' Day, I salute the teaching community that is devoted to nurturing minds & spreading the joys of education in society.
— Narendra Modi (@narendramodi) September 4, 2017
My tributes to Dr. S Radhakrishnan, an outstanding teacher and statesman on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) September 4, 2017
Teachers have a central role in realising our dream of a ‘New India’ that is driven by cutting edge research & innovation.
— Narendra Modi (@narendramodi) September 4, 2017