பசுமை நிறைந்த கேரளாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி, காசர்கோடு, எர்ணாகுளம், பாலக்காடு, விதுரா ஆகிய பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.
தென்மேற்கு பருவ மழையானது மேற்கு திசையில் 230 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக கடுமையாக புயல் சூழ்ந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டு பகுதிகளில் இன்று காலை மழை சற்று கடுமையாக இருந்து வந்ததால் மழைக்குப் பின் தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் தண்ணீர் நிரம்பியது. எனவே, கோழிக்கோட்டில் உள்ள கிராம மக்கள் அங்கன்வாடியில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனால் நீர்நிலைககளில் நீர் மட்டம் உயர்ந்ததுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
Kerala: Locals evacuated to rehabilitation centre in Kochi's Chellanam. #CycloneOckhi pic.twitter.com/iAwj7Q7g94
— ANI (@ANI) December 2, 2017
மேலும், கோழிக்கோட்டு பகுதிகளில் தற்போது, தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்தததை காணப்படுகிறது.