சிறைச்சாலையில் கொலைக்குற்றவாளியின் பிறந்தநாளை பலூன் கட்டி, கேக் வெட்டி, கறி விருந்துடன் கொண்டாடும் வீடியோ!!
பீகாரில் உள்ள சீதாமாரி சிறையில் இரட்டை கொலை குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளி தனது பிறந்தநாளை பலூன் கட்டி, கேக் வெட்டி, கறி விருந்துடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலாக பரவியதை அடுத்து, மாநிலத்தில் உள்ள சிறைச்சாலை வசதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தின் சிதாமார்ஹி மாவட்டத்தை சேர்ந்தவர் பின்ட்டு திவாரி. கடந்த 2015 ஆம் ஆண்டில் இங்குள்ள தர்பங்கா பகுதியில் இரு என் ஜினீயர்களை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்ட்டு திவாரி சிதாமார்ஹி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பின்ட்டு திவாரி சிறைக்குள் தனது 30-வது பிறந்தநாளை பலூன் கட்டி, கேக் வெட்டி கறி விருந்துடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
புத்தம் புது கருப்பு நிற பேண்ட், T-ஷர்ட் அணிந்திருக்கும் அந்த தண்டனை கைதி, பலூன்கள் கட்டப்பட்டுள்ள மரத்தின் நிழலில் சககைதிகளின் ‘ஹேப்பி பர்த்டே’ கோரஸ் பாட்டுடன் பிறந்த நாள் கேக் வெட்டி பரிமாறும் காட்சியும், அவருக்கு மற்ற கைதிகள் பரிசு அளிப்பதும், ஆட்டுக்கறிச் சோறுடன் சிறைக்குள் தடபுடலான விருந்து அளிக்கப்பட சம்பவமும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி, தற்போது வைரலாகி வருகிறது.
Bihar: Four guards of the jail have been suspended in connection with the incident where a criminal Pintu Tiwari, in a video, was seen celebrating his birthday inside the jail premises. https://t.co/pE41NLJc7N
— ANI (@ANI) September 1, 2019
இந்து குறித்து ANI செய்திநிறுவம் கூறுகையில்; இந்த சம்பவம் தொடர்பாக சிறைச்சாலையின் நான்கு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிறைவாசம் அனுபவிக்கும் போது திவாரி மற்றும் பிற கைதிகள் எவ்வாறு ஒரு கட்சியை நடத்த முடிந்தது என்பதைக் கண்டறிய உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தின் பிரயாராகில் உள்ள நைனி மத்திய சிறையில் இருந்து பல குற்றவாளிகள் கேமரா குடிப்பது, சாப்பிடுவது மற்றும் சிறைக்குள் மகிழ்ச்சியான நேரம் கிடைப்பது போன்ற சம்பவங்களில் சிக்கியுள்ளனர். இந்த புகைப்படங்கள் விரைவில் சமூக ஊடகங்களில் வைரலாகி, இந்த குற்றவாளிகள் எவ்வாறு மது பாட்டில்கள் மற்றும் கோழி உணவுகளை அணுக முடிந்தது என்று பலர் கேள்வி எழுப்பினர்.