நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 5-ம் தேதி துவங்கியது. இந்த இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே தமிழ்நாடு, தெலுங்கானா, தெலுங்குதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து இந்த அமர்வானது முதல்நாளே முடங்கியது.
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க, தி.மு.க எம்.பி-க்கள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஒற்றுமையை வெளிப்படுத்திய இருகட்சிகளும் அந்த டெக்னிக்கை நாடாளுமன்றத்திலும் சிறப்பாக கையாள்கிறது.
இதையடுத்து, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திர மாநில எம்.பி-க்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். கையில் பதாகைகளுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மற்றும் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநில எம்.பி-க்களின் தாக்கம் இந்த அமர்வில் சூடு பிடித்து வருகிறது.
இதையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தை எழுப்பி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான எதிர்கட்சியான காங்கிரஸை காட்டிலும், திரிணாமூல் காங்கிரஸ் அதிக ஆக்ரோஷத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறது.
YSRCP MPs hold protest in the Parliament premises over demand of Special Status to #AndhraPradesh . pic.twitter.com/qTwLSMBRbW
— ANI (@ANI) March 13, 2018
AIADMK MPs protest in Parliament premises over constitution of #CauveryManagementBoard pic.twitter.com/HzoCgfUKjS
— ANI (@ANI) March 13, 2018
TMC MPs protest in Parliament premises over the issue of Aadhaar linking. pic.twitter.com/2tAr7cIDuc
— ANI (@ANI) March 13, 2018