தண்ணீர் பாட்டில்கள்... அதிக ஆபத்துள்ள உணவு வகை... FSSAI திடீர் முடிவு

FSSAI Drinking Water:  FSSAI தற்போது பாட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகை' என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 2, 2024, 06:59 PM IST
  • இனி இந்த நிறுவனங்கள் BIS சான்றிதழ் பெற தேவையில்லை.
  • FSSAI சான்றிதழை மட்டும் பெற்றால் போதுமானது.
  • இருப்பினும், இதன் தரத்தை உறுதிசெய்ய FSSAI இப்படி வகைப்படுத்தி உள்ளது.
தண்ணீர் பாட்டில்கள்... அதிக ஆபத்துள்ள உணவு வகை... FSSAI திடீர் முடிவு  title=

FSSAI Drinking Water: பெரிய பெரிய உணவகங்களில் தொடங்கி சாலையோர தள்ளுவண்டி கடைகள் உள்பட அனைத்து உணவு விற்பனை செய்யும் இடங்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அனுமதி தேவையாகும். அதாவது, மக்கள் உட்கொள்ளும் அனைத்து உணவுப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் அளிக்கும் எனலாம். 

FSSAI ஒவ்வொரு உணவு பொருள்களுக்கும், உணவு தயாரிப்பாளர்களுக்கும் வெவ்வேறு சான்றிதழ்களை அளிக்கும். எனவே, நீங்களும் உங்கள் உணவு பாக்கெட்டுகள், உணவருந்தும் ஹோட்டல்களில் FSSAI அளித்த சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.

அதிக ஆபத்துள்ள உணவு வகை

அந்த வகையில், FSSAI தற்போது பாட்டில் அடைக்கப்பட்ட குடிநீரை 'அதிக ஆபத்துள்ள உணவு வகை' என வகைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது இதன்மூலம் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், கட்டாய ஆய்வுகள் மற்றும் மூன்றாம் தரப்பு தணிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் என தெரிகிறது. 

மேலும் படிக்க | 444 நாட்கள் SBI FD திட்டத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கும் தெரியுமா!

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்புக்கு, இந்திய தரநிலைப் பணியகத்தில் (BIS) சான்றிதழ் தேவையாக இருந்தது. இந்த தேவையை நீக்குவதற்கான மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்தது. அரசின் முடிவை தொடர்ந்து FSSAI இதனை அதிக ஆபத்து கொண்டு உணவு வகைக்குள் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது. இதன்மூலம், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலைகளில் ஆடண்டுக்கு ஒருமுறை அதன் ஆபத்து சார்ந்த ஆய்வுகள் நடைபெறும்.

இதனால் நுகர்வோருக்கு என்ன பயன்? 

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பாளர்கள் உரிமம் பெறுவதற்கு முன்னரும், பதிவு செய்துகொள்வதற்கும் முன்னரும் இந்த ஆய்வுகள் அதன் ஆலையில் மேற்கொள்ளப்படும். அதிக ஆபத்து வகையில் ஒரு உணவுப்பொருள் சேர்க்கப்பட்டால் ஆய்வுகள் கடுமையான ஆய்வுகள் நடைபெறும். 

அதிக ஆபத்துள்ள உணவு வகைகள் சார்ந்த தொழில்கள் அனைத்தும், FSSAI மூலம் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களால் ஆண்டுதோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது FSSAI உத்தரவாகும். இது நுகர்வோருக்கான இந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவதை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டதாகும். தற்போது இதனாலேயே பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்துள்ள உணவு வகைமைக்குள் வந்துள்ளது. 

முன்னதாக, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், BIS மற்றும் FSSAI இரண்டில் இருந்தும் இரட்டைச் சான்றிதழ் பெற வேண்டும். இதனை நீக்கக் கோரியும், எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை கொண்டுவரும்படியும் தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது BIS சான்றிதழ் நீக்கப்பட்டதை தொடர்ந்து FSSAI அதன் கட்டுபாட்டை கடுமையாக்கி உள்ளது.  புதிய விதிமுறைகள் இணக்க செயல்முறைகளை சீரமைக்கவும், உற்பத்தியாளர்கள் மீதான சுமையை குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஆபாசமாக பேசிய தலைமையாசிரியர்.. வசமாக சிக்க வைத்த மாணவிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News