கொல்கத்தாவில் கெத்து காட்டிய அந்த 8 பவுலர்கள்!

ஈடன் கார்டனில் அதிக விக்கெட்களை எடுத்த 8 பவுலர்கள்.

கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த பந்து வீச்சாளர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

1 /8

இந்த வரிசையில் முதலில் இருப்பது இந்தியாவின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தான். இவர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 

2 /8

இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவும் இந்த மைதானத்தில் 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 

3 /8

இந்தியாவிற்கு முதல் முறையாக ஐசிசி கோப்பை பெற்றது முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவின் தலைமையில் தான். இவரும் 14 விக்கெட்களை இந்த மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறார்

4 /8

இந்தியாவின் சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்களை கைப்பற்றி இந்த லிஸ்ட்டின் 4வது இடத்தில் உள்ளார். 

5 /8

அடுத்ததாக இந்தியாவின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் ஒருநாள் போட்டிகளில் 8 விக்கெட்களை பெற்றுள்ளார். 

6 /8

ஈடன் கார்டன்ஸில் முன்னாள் இந்திய அணியின் பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

7 /8

 ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் வெங்கடேஷ் பிரசாத் 6 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். 

8 /8

முன்னாள் இந்திய அணி வீரர் ரவி சாஸ்திரி ஈடன் கார்டஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.