சாதியை காரணம் காட்டி மனிதாபிமானத்தை கொலை செய்த கிராமத்தினர்.....

சாதியை காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மறுத்த கிராமத்தினர்; தாய்க்கு 17 வயது மகன் செய்த கொடூர செயல்......

Last Updated : Jan 18, 2019, 12:00 PM IST
சாதியை காரணம் காட்டி மனிதாபிமானத்தை கொலை செய்த கிராமத்தினர்.....  title=

சாதியை காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மறுத்த கிராமத்தினர்; தாய்க்கு 17 வயது மகன் செய்த கொடூர செயல்......

ஒடிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் அவரது மகன் தனது இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து சென்று அடக்கம் செய் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கர்பாபஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா என்பவர். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 17வயது மகனுடன்  அவர் தனியாக அந்த கிராமத்தில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அந்த பெண் வீட்டுக்கு அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது கால் தவறி விழுந்த அவர், அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜானகியின் இறுதிச் சடங்கை செய்ய கிராமத்தினர் சாதியை காரணம்' காட்டி கலந்து கொள்ள மறுத்துள்ளனர். இதையடுத்து, யாரும் உதவிக்கு முன் வராததால் தனியொருவராக இறுதிச் சடங்குகளைச் செய்த மகன் சரோஜ், தனது தாயின் சடலத்தை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையில் தனிநபராக சைக்கிளில் வைத்து நடந்து சென்று காட்டுப் பகுதியில் அடக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்சியலையை ஏற்படுத்தியுள்ளது.  

 

Trending News