உடல் எடைப் பிரச்சனை சாமானியர்கள் முதல் அமைச்சர்கள் வரை இருக்கத்தான் செய்கின்றன. வெவ்வேறு விதங்களில் அதனைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும், உடற்பயிற்சியே சிறந்த வழி என்கிறது மருத்துவம். உடற்பயிற்சியை தொடங்குவதற்கான சோம்பேறித்தனத்துக்கு எதாவதொரு உந்துசக்தி சிலருக்குத் தேவைப்படும். அந்த வகையில், தனது தொகுதி மக்களின் நலன் என்ற அக்கறையையே உந்துசக்தியாக கொண்டு அமைச்சர் ஒருவர் உடல் எடையை குறைத்து அசத்தியிருக்கிறார்.
மேலும் படிக்க | சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றம் - நிதின் கட்கரி முக்கிய தகவல்
மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அப்போது, உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியா என்பவர் நிதின் கட்கரியிடம், தனது தொகுதி வளர்ச்சிக்கான நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்காக அதிகமாக நிதி கேட்கிறீர்கள். அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நிபந்தனை. 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை இப்போது 93 கிலோவாக குறைத்துள்ளேன். இது தொடர்பான எனது புகைப்படத்தைப் பாருங்கள். இதேபோல, நீங்களும் உங்கள் எடையைக் குறைத்துக் கொண்டால் நிதி வழங்கப்படும். ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்’ என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
இதனை தீவிர முயற்சியாக எடுத்துக்கொண்ட அனில் பிரோஜியா, தனது உடலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 125 கிலோ எடையுடன் இருந்த அவர், உடற்பயிற்சி, யோகா, உணவுப்பழக்கம் உள்ளிட்டவைகளால் 4 மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னை உடற்தகுதி பெற ஊக்குவிக்கும் வகையில் நிதின் கட்காரி பிப்ரவரி மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஒவ்வொரு கிலோ எடை குறைப்புக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்குவேன் என்று கூறியிருந்தார். நான் அவருடைய நிபந்தனையை ஏற்று கடந்த நான்கு மாதங்களில் 15 கிலோ எடையை குறைத்துள்ளேன். இதன் மூலம் தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.15,000 கோடியை அவரிடம் கேட்க எனக்கு உரிமை உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது நிதின் கட்கரியைச் சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுபடுத்த உள்ளதாக அனில் பிரோஜியா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | குட் நியூஸ்: பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக குறையும் மின்சார வாகனங்களின் விலை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR