Indian Railways, Coaches Position In Train: கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் தினந்தோறும் பயணிக்கிறார்கள். சாமானிய மனிதர்கள் முதல் சொகுசான பயணத்தை விரும்புபவர்கள் வரை ரயில் பலதரப்பட்ட சேவையை வழங்கி வருகிறது. சொகுசு பேருந்துகளும் தற்போது அதிகமாகிவிட்டது என்றாலும் பொதுபோக்குவரத்தில் ரயிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அனைத்து நாள்களிலும் ரயில் நிலையங்களில் அதிக கூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது, அந்தளவிற்கு இந்தியர்களின் வாழ்வில் ரயில் என்பது ஒன்றாக கலந்துவிட்டது.
அப்படியிருக்க பலருக்கும் ரயில் குறித்து அறிந்துகொள்வதற்கும் மிகவும். ரயிலில் டிக்கெட், ரயில்களின் வசதிகள் மட்டுமில்லாமல் இந்திய ரயில்வேயின் ரயில்கள் குறித்தும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். அப்படியிருக்க, எந்தெந்த ரயில் பெட்டிகள், ரயிலில் எங்கெங்கு வைக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்தான். எதன் அடிப்படையில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகள் ரயில்களின் முன்னும், பின்னும் பொருதப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?... அதுகுறித்துதான் இங்கு தெரிந்துகொள்ளப்போகிறீர்கள்.
ரயில் பெட்டிகளின் வரிசை
எஞ்சின் முதல் பெட்டியாக இருப்பதை புரிந்துகொள்ள முடியும். ஓட்டுநர்கள் எதிர்வரும் சிக்னல்களை பார்ப்பதற்கும், ரயிலை தடையின்றி எளிதாக ஓட்டுவதற்கும் எஞ்சின் முதலில்தான் இருக்க வேண்டும். ஆனால், ஏசி இல்லாத படுக்கை வசதி மட்டும் கொண்ட பெட்டிகள், ஏசி வசதியுடன் வரும் பெட்டிகள், முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகள், சமையலறை கொண்ட ரயில் பெட்டிகள் ஆகியவை ரயிலில் எங்கெங்கு பொருத்தப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வது அவ்வளவு எளிதல்ல. அதற்கு பல்வேறு அளவுகோல்கள் உள்ளன.
மேலும் படிக்க | Budget 2025: ரயில் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம் வரலாம்.. விலை கூடுமா, குறையுமா?
குறிப்பாக, ரயில்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை பொறுத்தே ரயில் பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. எந்தெந்த பெட்டிகள் எந்தெந்த வரிசையில் இருக்க வேண்டும் என்ற நிலையான திட்டத்தை இந்திய ரயில்வே ஒவ்வொரு ரயிலுக்கும் வைத்திருக்கும். ரயிலில் எந்தெந்த பெட்டிகள் எங்கு இருக்கின்றன என்பதை நீங்கள் இணையதளத்திலும், செயலிகளிலும், ரயில் நிலையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். மேலும், ஒரு ரயிலில் எத்தனை பெட்டிகள் இருக்கின்றதோ, அதன் அடிப்படையில்தான் பெட்டிகளும் வரிசைப்படுத்தப்படும்.
எந்தெந்த ரயில் பெட்டிகள் எங்கெங்கு இருக்கும்?
ஒவ்வொரு ரயிலிலும் எஞ்சின் முதலில் இருக்கும், பொதுப் பெட்டி ஒன்றோ அல்லது இரண்டோ எஞ்சினுக்கு அடுத்து இருக்கும். அதன்பின் லக்கேஜ் ஏற்றும் பெட்டிகள் இருக்கும். அதன்பின்னரே, ஏசி வசதி கொண்ட பெட்டிகள் நடுவே இருக்கும். குறிப்பாக, முதல் ஏசி (First AC) வகுப்பு, இரண்டாம் ஏசி (Second AC) வகுப்பு, மூன்றாம் ஏசி (Third AC) வகுப்பு ஆகியவற்றின் பெட்டிகள் வரிசையாக இருக்கும். அதற்கு பிறகே ஏசி இல்லாத படுக்கை வசதி இல்லாத பெட்டிகள் (Sleeper Coach) இடம்பெறும். அதன்பின் பின்புறம், கூடுதல் பொதுப் பெட்டிகள் மற்றும் கடைசியாக ரயில் காவலரின் பெட்டிகள் இருக்கும்.
முன்பதிவில்லாமல் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துக்கொண்டு வரும் பயணிகள், பெட்டிகளை தேடிக்கொண்டு அலையக்கூடாது என்பதற்காக எஞ்சினினுக்கு அடுத்தும், கடைசியாகவும் பொதுப்பெட்டிகள் வைக்கப்படுகின்றன. குறிப்பாக, லக்கேஜ் ஏற்றி இறக்க வசதியாகவே அந்த பெட்டிகளும் தொடக்கத்திலும், கடைசியிலும் பொருத்தப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் முதலில் அல்லது கடைசியாக இடம்பெறும். பெண்களுக்கான தனிப் பெட்டியும் கடைசியாகவே இடம்பெறும். அதிக பயணிகள் பயணிக்கும் ஏசி பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் நடுவே அமைந்திருந்தால்தான் ரயில் இயக்கமும் சரியாக இருக்கும், ரயிலின் பாதுகாப்பும் சரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மீண்டும் முடங்கியது IRCTC... டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் அவதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ