ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகுகிறேன் -சித்து!

நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தால் தான் அரியலை விட்டு வெளியேறுவதாக நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்!

Last Updated : Apr 29, 2019, 07:57 PM IST
ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகுகிறேன் -சித்து! title=

நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வியடைந்தால் தான் அரியலை விட்டு வெளியேறுவதாக நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்!

மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார். இத்தொகுதியில் ராகுல் காந்தி தோற்றால் , தான் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் கட்சி அமைச்சருமான நவஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாஜத கட்சியில் தனது அரசியல் பயணத்தை துவங்கிய சித்து சர்ச்களுக்கு மிகவும் பரிட்சையமானவர். பாஜக-வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணந்த சித்து தற்போது பாஜக-விற்கு எதிராக தனது கருத்துகளை பகிரங்கமாக முன்வைத்து வருகின்றார்.

கடந்த சில மாதங்களாக இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. சித்து கூறும் கருத்துகளுக்கு எதிர்ப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து தனது கருத்தினை அவர் பதிவுசெய்துள்ளார். அதாவது கடந்த 70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் எந்த பொருளாதார முன்னேற்றமும் ஏற்படவில்லை என பாஜக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை சித்து திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைமை குறித்து கருத்து தெரிவித்த சித்து, நாட்டுப்பற்று என்றால் என்னவென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் தான் மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தோற்றால் நான் அரசியலில் இருந்தே விலக தயாராக உள்ளேன். ஊசி முதல் விமானம் வரை நாட்டில் அனைத்தும் உருவானது காங்கிரஸ் ஆட்சியில் தான். தனது கணவர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியை திறமையாக நிர்வகித்தனர் சோனியா என தெரிவித்தார்.

சோனியாவின் தலைமையின் கீழ் மத்தியில் 10 ஆண்டுகள் (2004-2014) நிலையான ஆட்சியை தந்தது காங்கிரஸ். இவற்றை எல்லாம் நினைவில் கொள்ளும் விஸ்வாசுகளே தேசியவாதிகளாக கருதப்படுவார்கள். இவற்றை புறந்தள்ளுபவர்கள் தான் தேச விரோதிகள். ரபேல் ஒப்பந்த சர்ச்சை தான் மக்களவை தேர்தலில் மோடி தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைய போகிறது எனவும் குறிப்பிட்டு பேசினார்.

Trending News