டொனால்டு டிரம்பை மிஞ்சிய நரேந்திர மோடி

Last Updated : Apr 13, 2017, 11:26 AM IST
டொனால்டு டிரம்பை மிஞ்சிய நரேந்திர மோடி title=

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட உலக தலைவராக உள்ளார். சுமார் 6.9 மில்லியன் ஃபாலோவர்களுடன் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மிஞ்சி முன்னிலை பெற்றுள்ளார். 

தற்போது வரை இன்ஸ்டாகிராமில் 101 போஸ்ட்களை நரேந்திர மோடி செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் உலக தலைவர்கள் என்ற சர்வதேச ஆய்வில் அரசு பணியாளர்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் 325 இன்ஸ்டாகிராம் கணக்குகளின் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.   

சுமார் 6.3 மில்லியன் ஃபாலோவர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது இடம் பிடித்துள்ளார், போப் பிரான்சிஸ் 3.7 மில்லியன் ஃபாலோவர்களுடன் 3வது இடத்தில் உள்ளார். 

ஆய்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்ட்களுக்கு சராசரியாக 2 லட்சத்து 23 ஆயிரம் லைக், கமென்ட்ஸ் கிடைப்பது தெரியவந்துள்ளது.

Trending News