பிரபலம் என்பதற்காக விதிவிலக்கா? கங்கனாவை சாடிய நீதிமன்றம்

அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென நடிகை கங்கனா ரணாவத் விடுத்த கோரிக்கையை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Mar 24, 2022, 08:26 PM IST
  • அவதூறு வழக்கில் ஆஜராகாத கங்கனா
  • பிரபலம் என்பதற்காக விதிவிலக்கா?
  • கங்கனாவிற்கு மும்பை நீதிமன்றம் கண்டனம்
பிரபலம் என்பதற்காக விதிவிலக்கா? கங்கனாவை சாடிய நீதிமன்றம் title=

நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துகளை தெரிவித்ததாக சினிமா பாடலாசிரியர் ஜாவித் அக்தர், கடந்த 2020-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டுமென நடிகை கங்கனா ரணாவத் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். தனது பணியை கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கங்கனா ரணாவத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால் அவரது கோரிக்கை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த காரணங்களை காரணம் காட்டி சட்ட விதிமுறைகளில் இருந்து விலக்கு
பெற முடியாது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுவரை 2 முறை மட்டுமே கங்கனா நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, அந்த 2 முறையும் அவர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஒத்துழைக்கும் நோக்கத்துடன் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | என்னம்மா! எப்போ சத்தியத்தை நிறைவேத்தப் போற? @Kangana என கலாய்க்கும் நெட்டிசன்கள்

குற்றம் சாட்டப்பட்டவர்  ஒரு பிரபலம் என்பதில் சந்தேகமில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் அவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை மறக்க முடியாது எனவும் இந்த விசாரணை நடைபெற அவரது ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார். சட்ட நடைமுறைகளை வழக்கறிஞரே கவனித்துக் கொள்வார் என கங்கனா ரணாவத் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Drunken Drive: குடித்துவிட்டு காரோட்டிய இந்திய கிரிக்கெட் பிரபலம்! டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News