26/11 நினைவு நாள்: இந்தியர்களை உலுக்கிப்போட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல்

நான்கு நாட்களுக்குத் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த போராட்டத்தில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டான். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2021, 10:08 AM IST
  • நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் நமது நாட்டின் உறுதியை உலுக்கிப்பார்த்தது.
  • அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம் மற்றும் திகில் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது.
  • சிலரின் அசாத்திய தைரியம், துணிச்சல், கடமை உணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் அப்போது கண்கூடாகக் காண முடிந்தது.
26/11 நினைவு நாள்: இந்தியர்களை உலுக்கிப்போட்ட மும்பை பயங்கரவாத தாக்குதல் title=

இந்தியாவின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால், இந்திய குடிமக்களாக நாம் மறக்க நினைக்கும் நாட்களில் நவம்பர் 26 ஆம் தேதிக்கும் கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும். அன்று துவங்கிய பயங்கரவாதிகளின் வெறியாட்டம்,  சுமார் நாங்கு நாட்களுக்கு தொடர்ந்தது, பல அப்பாவி உயிர்களை பலியாக்கியது.

நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் நமது நாட்டின் உறுதியை உலுக்கிப்பார்த்தது. கடல் மார்க்கமாக வந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் வளாகம், லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல் மற்றும் டவர், ஓபராய்-ட்ரைடென்ட் ஹோட்டல் மற்றும் காமா மருத்துவமனை ஆகியவற்றையும் தெற்கு மும்பையில் உள்ள மற்ற சில முக்கிய இடங்களையும் குறிவைத்தனர்.

மும்பை முழுவதும் நான்கு நாட்கள் நீடித்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த  பத்து பயங்கரவாதிகள் நடத்தியதில் ஆறு அமெரிக்கர்கள் மற்றும் ஒன்பது பயங்கரவாதிகள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நான்கு நாட்களுக்குத் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த போராட்டத்தில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டான். ஆனால், இந்த தாக்குதலில் ​​சுமார் 190 பேர் இறந்தனர், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

12 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நவம்பர் மாதத்தில் மும்பையில் (Mumbai) நடந்த அந்த தாக்குதல் நாட்டிற்கு துக்கம், அதிர்ச்சி, கோபம் மற்றும் திகில் என அனைத்து உணர்வுகளையும் ஒன்றாக அளித்தது. எனினும், சிலரின் அசாத்திய தைரியம், துணிச்சல், கடமை உணர்வு, அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் அப்போது கண்கூடாகக் காண முடிந்தது.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்

எலீட் சிறப்புப் படைகளின் உறுப்பினரான மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் (Sandeep Unnikrishnan) 51 சிறப்பு அதிரடி குழுவின் சக என்.எஸ்.ஜி கமாண்டோக்களையும் விருந்தினர்களையும் பாதுகாத்து, தாஜ் ஹோட்டலுக்குள் பயங்கரவாதிகளிடம் சண்டையையிட சென்ற வேளையில் உயரிய உயிர்தியாகத்தை செய்தார். கையெறி குண்டுகள் மற்றும் ஏ.கே .47 ஆயுதங்களைக் கொண்ட ஒரு பயங்கரவாதியுடன் சண்டையிட்டபோது அவர் கொல்லப்பட்டார். இந்த போராட்டத்தில் அவர் ஒரு பயங்கரவாதியைக் காயப்படுத்தி, அனைத்து ஜிஹாதிகளையும் கீழே உள்ள உணவகங்களை நோக்கி செல்ல வைத்தார். அங்கிருந்து அவர்கள் தப்பிக்க வழி இல்லாமல் போனது. மேஜர் உன்னிகிருஷ்ணனுக்கு மரணத்திற்குப் பின் அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.

ALSO READ: மும்பை பயங்கரவாத தாக்குதல் காயங்களை இந்தியா ஒருபோதும் மறக்காது: பிரதமர் மோடி

ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர்

மும்பை பயங்கரவாத தடுப்புப் படையின் தலைவரான ஹேமந்த் கர்கரே நவம்பர் 26 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அழைப்பு வந்தபோது தாதரில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அவர் உடனடியாக தனது டிரைவர் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் சிஎஸ்டி நிலையத்திற்கு புறப்பட்டார். பயங்கரவாதிகள் அப்போது காமா மருத்துவமனைக்கு அருகில் இருப்பதை அவர் அறிந்து கொண்டார். கர்கரே, போலீஸ் அதிகாரிகளான அசோக் காம்தே மற்றும் விஜய் சலாஸ்கர் ஆகியோர் இரண்டு பயங்கரவாதிகளைத் தேடினர். இறுதியில், அவர்கள் பயங்கரவாதிகளில் ஒருவரைப் பார்த்து, அவனுடன் சண்டையிட்டு காயப்படுத்தினர். அவன்தான் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் (Ajmal Kasab). ஆனால் இரண்டாவது பயங்கரவாதியை பிடிக்கும் முயற்சியில் மூவரும்

கரம்பீர் சிங் காங்

அனைத்து ஹீரோக்களும் காவல்துறை சீருடைகளையோ ராணுவ சீருடைகளையோ அணிவதில்லை. கரம்பீர் சிங் காங் 2008 ல் தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலின் (Taj Hotel) பொது மேலாளராக இருந்தார். அவரைச் சுற்றி மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்துகொண்டிருந்த போதும், அவர் தப்பிக்க வழி இருந்த போதும், கடமை தவறாத அந்த ஹோட்டல் மேலாளர், நூற்றுக்கணக்கான விருந்தினர்களும் ஊழியர்களும் தப்பிக்க உதவினார். இந்த தாக்குதலில் காங் தப்பித்தாலும், அவரது மனைவியும் இரண்டு குழந்தைகளும் உயிர் பிழைக்க முடியவில்லை. ஹோட்டலின் ஆறாவது மாடியில் ஏற்பட்ட தீயில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

துக்காராம் ஓம்பிளே

முன்னாள் ராணுவ வீரரான மும்பை காவலர் (Mumbai Police) துக்காராம் ஓம்பிளே மற்றும் அவரது சக போலீசார் கடத்தப்பட்ட காரில் வந்த இரண்டு பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அவர்களில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதற்குப் பிறகு அசாத்திய துணிச்சலைக் காட்டிய துக்காராம், கசாபின் துப்பாக்கிக்கு முன்னால் சென்று அவனை பிடிக்க அவனை நெருங்கினார். அவன் சுடக்கூடும் என தெரிந்தும், இறந்தாலும் அவனை பிடித்து விட வேண்டும், தன்னைத் தவிர வேறு யாருக்கும் குண்டு படக்கூடாது என்ற உயரிய எண்ணத்துடன் கசாபை நேருக்கு நேர் எதிர்கொண்டார். அவனது துப்பாக்கி குண்டுகள் அவரைத் துளைத்தன. தன்னைச் சுட்ட துப்பாக்கியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால், பிற போலீசார் கசாபை நெருங்கி அனவைப் பிடிக்க முடிந்தது. அவரது மிக உயர்ந்த தியாகத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக சக்ராவால் அவர் கௌரவிக்கப்பட்டார்.

ALSO READ:சீனாவிற்கு நோஸ் கட்: தாய்வானை அழைத்து சீனாவை ஒதுக்கிய அமெரிக்கா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News