புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,154 பேர் புதிதாக கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 268 பேர் இறந்தனர். இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 4,80,860 ஆக உயர்த்தியுள்ளது என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை (டிசம்பர் 30, 2021) வெளியிட்ட தரவுகளில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 82,402 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சிகிச்சையில் உள்ளவர்களின் கோவிட்-19 (Covid-19) கேசலோடில், 24 மணி நேரத்தில் 5,400 பேர் அதிகரித்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7,486 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த மீட்பு எண்ணிக்கை 3,42,58,778 ஆக உள்ளது.
India reports 13,154 new COVID19 cases in the last 24 hours; Omicron case tally rises to 961 with 263 cases in Delhi and 252 in Maharashtra pic.twitter.com/LEea2AP2UO
— ANI (@ANI) December 30, 2021
உலக மக்களின் முன்பு, கொரோனா தொற்றின் மற்றொரு மாறுபாடான ஓமிக்ரான் (Omicron) தொற்று புதிய சவாலாக முளைத்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 961 பேர் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 320 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகபட்சமாக 263, மகாராஷ்டிரா 252, குஜராத் 97, ராஜஸ்தான் 69, கேரளா 65, தெலுங்கானா 62, தமிழ்நாடு 45 மற்றும் கர்நாடகா 34 என பல்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று எண்னிக்கை பதிவாகியுள்ளது. புதிய மாறுபாட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரகாண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், கோவா, ஹிமாச்சலப் பிரதேசம், லடாக், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகியவை ஆகும்.
சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மொத்த தொற்றுநோய்களில் 0.24 சதவீதத்தை உள்ளடக்கியுள்ளது. அதே நேரத்தில் தேசிய அளவில் கோவிட்-19 மீட்பு விகிதம் 98.38 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 63,91,282 தடுப்பூசி (Vaccination) டோஸ்கள் வழங்கப்பட்ட நிலையில், நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 1,43,83,22,742 ஆக உள்ளது.
ALSO READ | கோவாவில் புத்தாண்டு கொண்டாட புதிய விதிமுறைகள்!
ALSO READ | கவலையை எழுப்பும் Omicron, கிடு கிடுவென பரவும் தொற்று
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR