பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மலிஹா சித்திக்கிடம் வாருங்கள் கொல்கத்தாவில் "மினி பாகிஸ்தான்" காட்டுகிறேன் என்று கூறிய இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பற்றி மந்திரி பிராஹாத் ஹக்கீமிடம் கேட்ட போது:-
இந்த விசியத்தை மத்திய அரசு தேவையில்லாமல் அரசியலாக்குகிறது. இது தேவை இல்லாத ஒரு விசியம் என்றார். மேலும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார். சில பத்திரிக்கையை பார்த்து நீங்க மத்திய அரசுக்கு ஆதரவான பத்திரிக்கை என்றும் நீங்கள் இந்துவா பற்றி தான் பேசுவிங்க உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். மேலும் ஒரு படி மேல போய் நீங்க வேற மதம் நான் வேற மதம் தேவையில்லாமல் என்னிடம் கேள்வி கேட்ட வேண்டாம் என்றார்.
இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் பத்திரிக்கையாளரிடம் கொல்கத்தாவில் மினி பாகிஸ்தான் காட்டுகிறேன் என்று கூறிய மந்திரியிடம் மம்தா பானர்ஜி இதுவரை இதைக்குறித்து எந்த ஒரு அறிக்கையும் கேட்டவில்லை.
பாரதிய ஜனதா பார்டியை சேர்ந்த சில மந்திரிகள் பிராஹாத் ஹக்கீம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், தேசத்துரோகி வழக்கில் கைது செய்ய வேண்டும் மேலும் மம்தா பானர்ஜிடம் விசாரிக்க வேண்டும் என்றனர். இந்தியாவில் எந்த மூலையிலும் இப்படி ஒரு விசியம் நடந்தால் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். பிராஹாத் ஹக்கீம் விவகாரம் முஸ்லிம் மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்ப முயற்சிப்பதாக இருக்கிறது என்றனர்.
காங்கரஸ் சேர்ந்தவர்களும் இந்த விவகாரம் தண்டிக்கத்தக்கது என்றும், மேலும் இந்த விசியத்தில் பாரதிய ஜனதா பார்டி அரசியல் லாபம் தேடுகிறது என்றனர்.
தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் மேற்கு வங்காளத்தில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருமா என்று பார்போம்.