விரைவில் இடிக்கப்படும் மராட் பிளாட்ஸ்; துயரத்தில் மக்கள்!

கேரளாவின், மராட் பகுதியில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 4, 2019, 08:56 AM IST
விரைவில் இடிக்கப்படும் மராட் பிளாட்ஸ்; துயரத்தில் மக்கள்! title=

கேரளாவின், மராட் பகுதியில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் கொச்சியில் உள்ள நான்கு அடுக்குமாடி வளாகங்கள், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறுவதற்கான இடிப்பை எதிர்கொள்கிறது. இதனையடுத்து இந்த குடியிருப்பு பிரிவுகளை காலி செய்வதற்கான காலக்கெடு வியாழக்கிழமை நள்ளிரவில் முடிவடைந்த நிலையில் விரைவில் இந்த குடியிருப்புகள் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மராட்டுவில் உள்ள 357 பிளாட்களில் 243 இடங்கள் காலியாகிவிட்டன, 80 குடியிருப்பு வாசிகள் இன்று(வெள்ளிக்கிழமை) மாலைக்குள் காலி செய்வர் என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விரைவில் இந்த குடியிருப்புகள் இடிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மே 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றம், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி செய்யப்பட்ட மராட் பகுதியில் இருந்து அனைத்து கட்டிடங்களையும் அகற்றுமாறு உத்தரவிட்டது. அந்த நேரத்தில், இடிப்பு தீர்ப்பின் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என்றும், பிளாட் உரிமையாளர்களுக்கு தலா ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. 

மேலும், இந்த இடைக்கால இழப்பீட்டுத் தொகையை பில்டர்களிடமிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும், பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டின் மீதமுள்ள தொகை ஒரு குழுவால் கணக்கிடப்படும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்கள் அடங்கிய குழு பிளாட் உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை மேலும் மதிப்பீடு செய்யும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றம் ஒப்புக் கொண்ட முழு செயல்முறையையும் முடிக்க கேரளா 120 நாட்கள் கால அவகாசம் கோரியது. இதற்காக ஒழுங்குமுறை குழு அமைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குறிப்பிட்டி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்ய வியாழன் நல்லிரவு வரை காலக்கெடு விதிக்கப்பட்டது.

காலக்கெடு நேற்றிரவு முடிந்ததும் பொலிசார் இந்த வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்கு எடுத்துக் கொண்டனர் மற்றும் நள்ளிரவுக்குப் பிறகு யாரும் இங்கு தங்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட பிளாட் குடியிருப்புகளில் இருந்து சுமார் 90% மக்கள் வெளியேறிவிட்டதாகவும், விரைவில் பிளாட்களை இடிப்பதற்கான பணி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News