கேரள சிபிஐ (எம்) தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு!!
கேரள CPI(M) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினாய் கோடியேரி ஆகியோருக்கு மும்பை காவல்துறை புதன்கிழமை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோடியேரி கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் தலைமறைவாக உள்ளார்.
மும்பையில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த 33 வயது பெண் கடந்த 2009 ஆம் ஆண்டு துபாயில் உள்ள டான்ஸ் பாரில் வேலை பார்த்தார். அப்போது அந்த பெண்ணுக்கு கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் தொழில் அதிபர் பினாய் பாலகிருஷ்ணனின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் அவர் திருமணம் செய்வதாக கூறி தன்னை பலமுறை கற்பழித்ததாக, அந்த பெண் பினாய் பாலகிருஷ்ணன் மீது மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்த உறவால் தனக்கு எட்டு வயது குழந்தை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த புகார் குறித்து போலீசார் பினாய் பாலகிருஷ்ணன் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்ட மும்பை காவல்துறையினர் கேரளா காவல்துறையின் உதவியை நாடினர்.
இந்நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பினாய், முன் ஜாமீனுக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவர் மீது ஒஷிவாரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு 72 மணி நேரத்திற்குள் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்ட நோட்டீஸுடன் மும்பை காவல்துறையினர் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் திருவாங்காட்டில் உள்ள பினாய் கோடியேரியின் மூதாதையர் இல்லத்தையும் பார்வையிட்டனர்.
தனது மூத்த மகன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சிபிஐ (எம்) மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் சனிக்கிழமை கட்சியையும் தன்னையும் வழக்கில் இருந்து விலக்க முயன்றார்.