கோத்ரா கலவரங்கள் மோடி ஒரு தீவிரவாதி என்பதை காட்டுகிறது -சந்திரபாபு நாயுடு!

பிரதமர் மோடி ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சனம் செய்தார். 

Last Updated : Apr 3, 2019, 03:31 PM IST
கோத்ரா கலவரங்கள் மோடி ஒரு தீவிரவாதி என்பதை காட்டுகிறது -சந்திரபாபு நாயுடு! title=

பிரதமர் மோடி ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சனம் செய்தார். 

மத்திய அரசின் திட்டங்களுக்கு சந்திரபாபு நாயுடு தனது ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு மாநில திட்டம் போல் காட்டுகிறார். இதனால் அவர் ஸ்டிக்கர் பாபு ஆகிவிட்டார் என கடுமையாக சாடினார். மேலும் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முன்னேற்றத்தை மறந்து விட்டு தனது மகனை முன்னேற்றுவதில் மட்டுமே அக்கறை செலுத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் தற்போது மோடியின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் புத்தூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் மோடியை தாக்கி பேசியுள்ளார்.

பொதுகூட்டத்தில் பேசிய நாயுடு., நரேந்திரமோடிக்கு அன்பு, பாசம், உறவுகள், நட்பு குறித்து எதுவும் தெரியாது. அவருக்கு மனைவி, குழந்தைகள் என்னும் பந்தங்கள் இருந்தால்தானே இதெல்லாம் தெரியும். குடும்பம் என்றால் என்ன என்று தெரியாத அவர் என் குடும்பத்தை பற்றி பேசுகின்றார் என தெரிவித்தார்.

ஒருகட்டத்தில் பிரதமர் மோடி ஒரு தீவிரவாதி எனவும், அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டிற்கு பல பிரச்சனைகள் வரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஆந்திராவுக்கு எந்த உதவியும் செய்யாமல் போனது மட்டுமின்றி விமர்சனம் செய்ய அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. மோடி, சந்திரசேகர ராவ், ஜெகன்மோகன் ரெட்டிக்கு நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிற்கும் போடுவது போல தான் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

Trending News