கராச்சி To டெல்லி! ’பாரத ரத்னா’ விருது பெறப்போகும் பாஜக லால் கிருஷ்ண அத்வானியின் ‘யாத்திரைகள்’

Bharat Ratna To Lal Krishna Advani: பாஜகவின் தோற்றம் முதல் இன்று வரை கட்சியின் ஆணிவேராக இருந்து, பாஜகவுக்கு வழிகாட்டிய திரு லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2024, 02:01 PM IST
  • முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது
  • இந்துத்துவா அரசியலை முன்னெடுத்த லால் கிருஷ்ண அத்வானி
  • அத்வானியின் அரசியல் பயணமும் யாத்திரை பயணங்களும்
கராச்சி To டெல்லி! ’பாரத ரத்னா’ விருது பெறப்போகும் பாஜக லால் கிருஷ்ண அத்வானியின் ‘யாத்திரைகள்’ title=

பாஜகவின் மூத்தத் தலைவரும், இந்திய முன்னாள் துணைப்பிரதமருமான திரு லால் கிருஷ்ண அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும். பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வலுவான கட்சியாக உருவெடுத்திருப்பது வரை கட்சியின் எல்லா கட்டங்களிலும் பாஜகவுக்கு வழிகாட்டிய திரு லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.

எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது 
பாஜக மூத்த தலைவரும் வழிகாட்டியுமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது என்ற செய்தியை, பிரதமர்  மோடி, எக்ஸ் வலைதள பக்கத்தின் மூலம் ஊடகங்களுடன் பகிர்ந்துக் கொண்டார். 

பாரத ரத்னா விருது
தங்களது சொந்த முயற்சிகளால் சமூகத்திற்கு சிறந்த பங்களிக்கும் மனிதர்களின் உன்னதமான சேவை மற்றும் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் இந்திய அரசின் உயரிய விருது பாரத ரத்னா விருது.பாரத ரத்னா விருதுக்கு, முறையான பரிந்துரைகள் தேவையில்லை. இந்த விருதுக்கான பரிந்துரையை பிரதமரே குடியரசுத் தலைவரிடம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இலங்கை அரசின் புதிய ஆயுதம்! இணையதளத்திற்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

லால் கிருஷ்ண அத்வானி

முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானிக்கு 96 வயதாகிறது. பாரதிய ஜனதா கட்சியின் (ஜனசங்கம்) நிறுவன உறுப்பினரான அத்வானி 1927 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி கராச்சியில் (இன்றைய பாகிஸ்தான்) பிறந்தவர். 

படிப்பு

லால் கிருஷ்ண அத்வானி மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். படித்து முடித்த பிறகு பத்திரிக்கையாளராக பணியாற்றினார். தொழிற்சங்கத்திலும் இணைந்து பணியாற்றிய அவர், 1947 இல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, ​​அத்வானி கராச்சியின் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS (ஆர்எஸ்எஸ்)) செயலாளராகவும் இருந்தார்.

இந்துத்துவா அரசியலை முன்னெடுத்த லால் கிருஷ்ண அத்வானி

இந்துத்துவா அரசியலின் முதல் முன்னெடுப்பை எடுத்தவர் லால் கிருஷ்ண அத்வானி. அத்வானியும், முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்தத் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயும்இணைந்து, காங்கிரஸின் சித்தாந்தத்திற்கு எதிராக அரசியல் களம் கண்டனர்.
அவர்களுடைய முயற்சிகளின் வடிவமான பாரதிய ஜனதா கட்சி இன்று நாட்டில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கிறது.

அத்வானியின் அரசியல் பயணமும் யாத்திரை  பயணங்களும்

லால் கிருஷ்ண அத்வானி தனது அரசியல் பயணத்தில் பல பயணங்களை மேற்கொண்டு, அதன் மூலம் கட்சியை வளர்த்தெடுத்தார். ராமர் ரத யாத்ரா, ஜனதேஷ் யாத்ரா, பாரத் சுரக்ஷா யாத்ரா, ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்ரா, பாரத் உதய் யாத்ரா ஆகியவற்றை முன்னின்று நடத்தியவர். அவரது இந்த சுற்றுப்பயணங்கள் கட்சியை நாடு முழுக்க கொண்டு சென்று, கட்சியை வளர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தீவிரவாத தொடர்பு குறித்த பாகிஸ்தானின் பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா

உத்வேகம் கொடுத்த தலைவர்

பா.ஜ.க.வின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அத்வானி, பொது வாழ்வில் பல தசாப்த காலங்களாக சேவை புரிந்தவர. கட்சியின் மீது அவர் கொண்டிருந்த விசுவாசமும், அர்ப்பணிப்பும் உதராணமாக காட்டப்படுபவை. பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்த தலைவராக உருவெடுத்த திரு லால் கிருஷ்ண அத்வானி, பிரதமர் மோடிக்கும் அரசியல் குருவாக திகழ்ந்தவர். 

பாஜகவின் தேசிய தலைவராக லால் கிருஷ்ண அத்வானி
முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி 1986-1990, 1993-1998 மற்றும் 2004-2005 ஆகிய ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராகவும் இருந்தார். 1980க்குப் பிறகு, கட்சியில் நீண்ட காலம் பதவி வகித்தவர் லால் கிருஷ்ண அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வாழ்க்கை
லால் கிருஷ்ண அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்த தலைவர்களில் முதலிடம் லால் கிருஷண அத்வானியுடையது என்றால் அது மிகையாகாது.

மேலும் படிக்க | Air Strikes:பழிக்கு பழி! ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் தாக்குதல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News