அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் இதனை அறிவித்துள்ளனர். இந்த தொடரில் சுப்மான் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் ஒரே அணியில் இடம் பெற்றுள்ளனர். கடைசியாக இவர்கள் மூன்று பேரும் 2023 உலகக் கோப்பையில் ஒருநாள் போட்டியில் இடம்பெற்றனர். 15 பேர் கொண்ட அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்க உள்ளார்.
மேலும் படிங்க: பிசிசிஐயின் புதிய கட்டுப்பாடுகள்.. ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம்!
யார் யாருக்கு வாய்ப்பு?
பார்டர்-கவாஸ்கர் டிராபியின் கடைசி போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடைசி இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. தற்போது அவர் சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெற்று இருந்தாலும், காயம் குறித்த முழு தகவல் இல்லை. இங்கிலாந்து தொடரிலும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இங்கிலாந்து தொடரில் விளையாட உள்ளார். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய ஷமி அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் விளையட உள்ளார். அர்ஷ்தீப் சிங்கும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.
ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தரும் இடம் பெற்றுள்ளார். முகமது சிராஜ் அணியில் இடம் பெறவில்லை. கில்லுக்கு பேக்-கப்பாக ஜெய்ஷ்வால் இடம் பெற்றுள்ளார். அவர் இன்னும் ஒருநாள் தொடரில் அறிமுகமாகவில்லை. பேட்டிங்கில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஒரு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி!
ரோஹித் சர்மா (கேப்டன்), கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா.
INDIA SQUAD FOR CHAMPIONS TROPHY 2025
Rohit (C), Gill (VC), Kohli, Iyer, Rahul, Hardik, Axar, Sundar, Kuldeep, Bumrah, Shami, Arshdeep, Jaiswal, Pant, Jadeja. pic.twitter.com/uvY5gc4du9
— Johns. (@CricCrazyJohns) January 18, 2025
மேலும் படிக்க | உலகிலேயே இரண்டாவது வீரர்.. மாபெரும் சாதனை படைத்த பொல்லார்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ