பஞ்ச்குலா கலவரம்: கலவரத்தில் சிக்கி 12 பேர் பலி!
கலவரம் டெல்லியை எட்டியது: ஆனந்த விகார் டெர்மினல் இரயில் நிலையத்தில் ரெயா எக்ஸ்பிரஸ் ரயிளுக்கு தீவைப்பு!
குர்மித் ராம் ராகிம் மீதான தண்டனையை அடுத்து நடக்கும் கலவரத்தை கைவிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியாணா மற்றும் பஞ்சாபில் மக்களுக்கு வேண்டுகோள்!
ராம் ராகிம் மீதான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, நான்கு மாநிலங்களில் வன்முறை - ஹரியானா, பஞ்சாப், தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம்
டெல்லி ரயில்வே நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது: நீராஜ் ஷர்மா
உத்தரப்பிரதேசத்தில் காஜியாபாத் லோனி நகரில் பேருந்துகள் சேதம்!
#DeraSachaSauda followers turn violent, damage media vans post conviction of chief #RamRahimSingh (Earlier visuals from Panchkula) pic.twitter.com/x0XppkWR4t
— ANI (@ANI) August 25, 2017
பஞ்ச்குலாவில் காவதுறையினர் மீது ராம் ராகிம் ஆதரவாளர்கள் கற்களை வீசினர்!
ராம் ராகிம் ஆதரவாளர்கள் பஞ்சாப் மாநிலத்தில் மாலூட் மற்றும் பல்லுனா ரயில் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர்: வடக்கு ரயில்வே
சிர்ஸாவில் டெரா சச்சா சவுதா தலைமையகத்திற்கு அருகே குரீமி ராம் ராகிம் ஆதரவாளர்களை கலைப்பதற்காக காவல்துறை கியர் ஷெல்ஸ், நீர் பீரங்கிகளை பயன்படுத்தி வருகிறது!
ரோஹ்தக் சுனரிய ஜெயிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் குவிப்பு!
பஞ்ச்குலா கலவரத்தில் சிக்கி 5 பேர் பலி!
5 மாவட்டங்களில் ஊர் அடங்கு உத்தரவு! டெல்லி எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது!
100க்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கு இரையானது, போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி!
குர்மித் ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்!
முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என நிறுபிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 ம் தேதி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தண்டைனையை உறுதி செய்யவுள்ளது. குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜக்டீப் சிங் ஆகஸ்ட் 28 ம் குவாண்டம் தீர்ப்பை வாசிப்பார் என தெரிகிறது
ராம் ராகிமுக்கு எதிரான இவ்வழக்கு 2002 ம் ஆண்டு தனது இரண்டு பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த கடிதத்தின் அடிப்படையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது.
2002 ஆம் ஆண்டு பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு இக்கடிதம் மொட்டை கடுதாசியாய் அப்பெண் சீடர்களால் அனுப்பப்பட்டு பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்துவந்தது. முன்னதாக இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் குர்மித் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என நிறுபிக்கப்பட்டுள்ளது.