இந்தியாவின் எல்லைகளையும், நாட்டு மக்களை பாதுகாக்கவும் இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் பதற்றமான சூழலை உண்டாக்கியுள்ள எல்லை வன்முறை மோதல்களின் பின்னணியில், சீனாவை சமாளிக்கவும், இந்தியாவின் எல்லைகளையும், நாட்டு மக்களை பாதுகாக்கவும் இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் G கிஷன் ரெட்டி(G Kishan Reddy) தெரிவித்துள்ளார். லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் வீட்டில் அவரது குடும்பத்தினரை சந்தித்த பின்னர், அமைச்சர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் சீனாவுக்கு எதிராக நாட்டிற்கு ஆழ்ந்த உணர்வுகள் இருப்பதாகவும், முடிந்தவரை சீன பொருட்களை தங்கள் சொந்த விருப்பப்படி புறக்கணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கூறினார்.
TikTok செயலிக்கு பதிலாக நாம் இனி எந்தெந்த செயலியை பயன்படுத்தலாம்...
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி(PM Narendra Modi) அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளதாகவும், அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்., "உள்ளூர் நிலைமையைப் பொறுத்தவரை, இந்தியாவின் எல்லைகளையும் அதன் துருப்புக்களையும் பாதுகாக்கும் அதே வேளையில் சீன இராணுவத்தை சமாளிக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அரசாங்கம் வழங்கியுள்ளது" என்று கூறினார்.
தியாகிகளின் குடும்பத்திற்கு அரசாங்கமும் இராணுவமும் முழு ஆதரவை வழங்கும் என்றும், கர்னல் பாபுவின் குடும்பத்தினரை சந்திப்பதன் குறிக்கோள் இந்த செய்தியை அவர்களுக்கு தெரிவிப்பது தான் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சீனாவுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் திட்டத்திற்கு ரூ.500 கோடி வரை வாங்குவதற்கு மூன்று இராணுவ பிரிவுகளுக்கு அரசாங்கம் அவசர நிதி அதிகாரங்களை வழங்கியுள்ளது. அரசாங்க வட்டாரங்கள் இந்த தகவலை ஞாயிற்றுக்கிழமை அளித்தன. இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவை இராணுவத்தின் மூன்று பகுதிகளிலும் வருகின்றன.
Paid tributes to Col Santosh Babu garu, at their residence in Suryapet, Telangana along with Sri @drlaxmanbjp, & Sri @RaoMlc.
Spoke with the family members and expressed my deepest condolences while also recalling the Late Col.’s valour.
India will always remember his sacrifice. pic.twitter.com/BnYG0dJiJm— G Kishan Reddy (@kishanreddybjp) June 21, 2020
உண்மை கட்டுப்பாட்டு வரிசையில் (LAC) தங்கள் செயல்பாட்டு தயாரிப்புகளை அதிகரிக்க மிகக் குறுகிய காலத்தில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கு படைகளுக்கு சிறப்பு நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே விற்பனையாளரிடமிருந்து அத்தியாவசிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவது போன்ற சிறப்பு தள்ளுபடியை வழங்குவதன் மூலம் இராணுவ கொள்முதல் தாமதத்தையும் அரசாங்கம் குறைத்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், ஜூன் 15 அன்று கிழக்கு லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட வன்முறை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது. மீண்டும் ஒரு மோதல் ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்கனவே இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு LAC தொடர்பான பிரச்சார தயாரிப்புகளை முடுக்கிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். இராணுவ ஆதாரங்கள், வெடிமருந்து இருப்புக்களை அதிகரிக்க இராணுவம் அவசர நிதி அதிகாரங்களைப் பயன்படுத்தப் போகிறது, காரணம் இந்த பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.
ராணுவ துருப்புகள் குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய - சீனா எல்லை பகுதி!...
இதனிடையே கால்வன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல், கடந்த 45 ஆண்டுகளில் இரு தரப்பினருக்கும் இடையிலான மிகப்பெரிய மோதலாக குறிக்கப்படுகிறது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் தங்கள் உயிரை நாட்டுக்காக அற்பணித்தனர்,. எனினும் சீன மக்கள் விடுதலை இராணுவம் (PLA) அதன் வீரர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று இதுவரை வெளியிடவில்லை.