தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கு நன்றி -பினராயி!

தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Aug 16, 2019, 08:23 AM IST
தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கு நன்றி -பினராயி! title=

தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆறாவது நாளாக மழை நீடித்து வருகிறது. குறிப்பாக மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தால் காணாமல் போனோர் 59 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவுக்கு பல தரப்பினரும் பொருளாகவும், பணமாகவும் தந்து உதவிவருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் ட்விட் செய்துள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., ‘தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். 

சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் (@mkstalin) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News